செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 50வது முறையாக நீட்டிப்பு…!
தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்தது. ஓராண்டுக்கும் மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இதனையடுத்து நேற்று நடத்தப்பட்ட விசாரணையின்போது நீதிபதிகள், கைப்பற்றப்பட்ட பென் டிரைவ் தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதையும், அதில் பணமோசடி புகார் தொடர்புடைய கோப்பு இருந்ததையும் அமலாக்கத் துறை நிரூபிக்க வேண்டும்’ என தெரிவித்து விசாரணையை தள்ளி வைத்தனர்.
இந்நிலையில் இன்று காணொலி மூலம் சென்னை முதன்மை அமர்வு முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் வழக்கை விசாரணை செய்தனர். விசாரணையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நாளை வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 50வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...