அரசு, தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் மகளிருக்கு 30 சதவீத இடஒதுக்கீடு – மத்திய அரசு ஒப்புதல்

இந்தியா

அரசு, தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் மகளிருக்கு 30 சதவீத இடஒதுக்கீடு – மத்திய அரசு ஒப்புதல்

அரசு, தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் மகளிருக்கு 30 சதவீத இடஒதுக்கீடு – மத்திய அரசு ஒப்புதல்

அரசு, தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் மகளிருக்கு 30 சதவீத இடஒதுக்கீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை  இணையமைச்சர்  ஜெயந்த் சௌத்ரி மாநிலங்களவையில் இன்று  எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் 

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய திறன் இயக்கம் பல்வேறு திறன் மேம்பாட்டு மையங்கள், கல்லூரிகள் மற்றும் மையங்கள் மூலம் திறன் பயிற்சி, மறுதிறன் பயிற்சி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஆகியவற்றை மகளிர் உட்பட நாட்டின் அனைத்து சமூக பிரிவினருக்கும் அளித்து வருகிறது.

தொழில் பயிற்சி நிலையங்கள் மூலம் பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம், கைவினைஞர்கள் பயிற்சித் திட்டம் உள்ளிட்டவை வாயிலாக பயிற்சிகள் அளிக்கிறது. பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் மகளிரின் பங்கேற்பு அதிகரித்து வருவதையடுத்து, அவர்களுக்கான செலவுத் தொகை அளிக்கப்படுகிறது.

அனைத்து அரசு மற்றும் தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் மகளிருக்கு 30 சதவீத இடஒதுக்கீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மகளிருக்கென 19 தேசிய திறன் பயிற்சி நிலையங்களும், 300க்கும் மேற்பட்ட  தொழில் பயிற்சி நிலையங்களும் உள்ளன.

2024-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத் திட்டத்தின் கீழ், பயிற்சி பெற்றவர்களில் 36.59 சதவீதம் பேரும், பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களில் 44.30 சதவீதம் பேரும்  மகளிர் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் மகளிருக்கென ஒரு தேசிய திறன் பயிற்சி நிலையமும், மகளிருக்கென 10 தொழில் பயிற்சி நிலையங்களும் உள்ளன.

பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 1.48 கோடி பேருக்கு பயிற்சி…

நாட்டில் உள்ள ஊழியர்களுக்கு மறுதிறன் பயிற்சி அளிக்க வேண்டியதன் அவசியம் காரணமாக திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக  2015-ம் ஆண்டு பிரதமரின்  திறன் மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் ஊழியர்கள் உட்பட  இளைஞர்களுக்கு குறுகிய கால பயிற்சி மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி, முன்கற்றல் அங்கீகாரம் வாயிலாக திறன் மேம்பாடு,  மறுதிறன் பயிற்சி  ஆகியவை அளிக்கப்படுகிறது.

பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், குறுகிய கால பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2015-ம் ஆண்டு முதல் 30.6.2024 வரை, 1.48 கோடி பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன. குறுகிய கால பயிற்சி பெற்ற 56.88 லட்சம் பேரில் 24.3 லட்சம் பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

 

Leave your comments here...