நிதி ஆயோக் கூட்டம் – டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

தமிழகம்

நிதி ஆயோக் கூட்டம் – டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

நிதி ஆயோக் கூட்டம் – டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 27ம் தேதி டெல்லி செல்கிறார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்கிறார்.

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதும், இதுவரை இருந்து வந்த மத்திய திட்டக்குழு என்னும் அமைப்பு கலைக்கப்பட்டது. அதற்கு பதிலாக “நிதி ஆயோக்” அமைப்பு நிறுவப்பட்டது. இதன் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி இருந்து வருகிறார்.

இந்த நிலையில் நிதி ஆயோக்கின் 9-வது நிர்வாக குழு கூட்டம் வருகிற 27-ந்தேதி டெல்லியில் நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார். பிரதமர் மோடி, 3-வது முறையாக ஆட்சி அமைத்த பிறகு நடைபெறும் முதல் நிதி ஆயோக் நிர்வாகக் குழுக் கூட்டம் இதுவாகும்.

இந்த நிலையில் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27-ந்தேதி டெல்லி செல்கிறார்.

நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் நிலுவைத் தொகை, நிதி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave your comments here...