நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அதானி குழுமத்திற்கு அளிக்கப்பட்ட தாராவி மறுசீரமைப்பு டெண்டர் ரத்து – உத்தவ் தாக்கரே…!

இந்தியா

நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அதானி குழுமத்திற்கு அளிக்கப்பட்ட தாராவி மறுசீரமைப்பு டெண்டர் ரத்து – உத்தவ் தாக்கரே…!

நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அதானி குழுமத்திற்கு அளிக்கப்பட்ட தாராவி மறுசீரமைப்பு டெண்டர் ரத்து – உத்தவ் தாக்கரே…!

மகாராஷ்டிராவில் தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அதானி குழுமத்திற்கு அளிக்கப்பட்ட தாராவி மறுசீரமைப்பு திட்டம் ரத்து செய்யப்படும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற அக்டோபர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளன..

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் தாராவி ஏராளமான குடிசைகள் அமைந்த பகுதியாகும். இந்த குடிசை பகுதிகளை அப்புறப்படுத்திவிட்டு அந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என மகாராஷ்டிரா அரசு தெரிவித்தது. தாராவி பகுதியை மறுமேம்பாடு செய்வதற்கு ரூ. 5069 கோடி மதிப்பிலான திட்டத்தை அதானி குழும நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மும்பையின் முக்கியமான பகுதியில் 600 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்படுத்த இருக்கிறது.இந்த திட்டம் முதலில் வேறோடு நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டது. பின்னர் அதானி குழுமத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது

இதற்கு தாராவி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தபோதிலும் மகாராஷ்டிரா அரசு தாராவி குடிசை மறுமேம்பாடு திட்டத்திற்கான டெண்டரை அதானி குழுமத்திற்கு வழங்கியுள்ளது. பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட இந்த திட்டம் தற்போது அதானி குழுமத்திற்கு சென்றுள்ளது.

மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்ட தாராவி குடிசை மறுசீரமைப்பு டெண்டரை ரத்து செய்வோம். மும்பையை அதானி நகரமாக மாற்ற அனுமதிக்கமாட்டோம். நாங்கள் கூடுதல் சலுகைகள் எதையும் வழங்கமாட்டோம்.தாராவியில் வாழும் மக்களுக்கு எது நல்லதோ அதை செய்வோம். தேவைப்பட்டால் புதிய டெண்டரை வழங்குவோம்” என தெரிவித்துள்ளார்.

மும்பை தாராவி பகுதி தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இங்குள்ள ஆயிரக்கணக்கான குடிசைகளை இடித்து விட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வருகிறது. இத்திட்டத்தை நிறைவேற்ற பல முறை டெண்டர் விடப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. கடைசியாக டெண்டர் விடப்பட்டதில் தாராவி குடிசை மேம்பாட்டுத்திட்டம் செயல்படுத்தும் ஒப்பந்தத்தை அதானி நிறுவனம் பெற்றுள்ளது.

தாராவியில் தகுதியுள்ள அனைவருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் மாற்று வீடுகள் வழங்கப்படும் என்று அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது. இலவச வீடு பெற தகுதியில்லாதவர்களுக்கு மும்பையில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் முலுண்ட் மற்றும் வடாலா பகுதியில் இருக்கும் உப்பள நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு அங்கு குடியமர்த்தப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வீடுகளுக்கு கட்டுமான செலவை மட்டும் குடிசைவாசிகள் அதானி நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டும். தாராவி குடிசை மறுசீரமைப்பு திட்டத்திற்கு அதானி நிறுவனத்துடன் மாநில அரசு ஒப்பந்தம் செய்து கொண்டு கூட்டு நிறுவனம் ஒன்றையும் ஆரம்பித்துவிட்டது.

Leave your comments here...