கன்னடர்களுக்கு வேலை வழங்கும் மசோதா.. வலுக்கும் எதிர்ப்பு – பின்வாங்கிய கர்நாடக அரசு..!

இந்தியா

கன்னடர்களுக்கு வேலை வழங்கும் மசோதா.. வலுக்கும் எதிர்ப்பு – பின்வாங்கிய கர்நாடக அரசு..!

கன்னடர்களுக்கு வேலை வழங்கும் மசோதா.. வலுக்கும் எதிர்ப்பு – பின்வாங்கிய  கர்நாடக அரசு..!

கர்நாடகாவில் தனியார் நிறுவனங்கள் நிர்வாகப் பொறுப்புகளில் 50 சதவீதமும், நிர்வாகமற்ற பொறுப்புகளில் 70 சதவீதமும் கன்னடர்களுக்கு ஒதுக்குவதை உறுதிப்படுத்துவதற்கான மசோதா நிறைவேற்றப்படுவதற்கு முன் ஆழமான ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று அம்மாநில பெரு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அமைச்சர் எம்.பி.பாட்டீல் உறுதி அளித்துள்ளார்.

கர்நாடகாவில் கன்னட மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் நோக்கில் அம்மாநில அரசு சட்டம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதற்காக தனியார் நிறுவனங்கள் பணியாளர்களை பணியில் அமர்த்தும்போது, நிர்வாகப் பொறுப்புகளில் 50 சதவீதமும், நிர்வாகமற்ற பொறுப்புகளில் 70 சதவீதமும் கன்னடர்களை மட்டுமே நியமிப்பதை உறுதிப்படுத்துவதற்கான மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

இது குறித்து முதல்வர் சித்தராமையா வெளியிட்ட எக்ஸ் பதிவில், “கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும் குரூப் சி மற்றும் குரூப் டி பணிகளை 100% கன்னடர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது” என்று தெரிவித்திருந்தார். அவரது இந்த அறிவிப்பை அடுத்து தொழில்துறையினர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர்.

கர்நாடக அரசின் புதிய மசோதாவுக்கு உயிரி தொழில்நுட்ப மருந்து தயாரிப்பு நிறுவனமான பயோகான் அதிபர் மஜும்தார் ஷா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கன்னடர்களுக்கு 50% வேலை அளிக்க வகை செய்யும் மசோதாவுக்கு ஐ.டி. நிறுவனங்களின் சங்கமான நாஸ்காம் கண்டனம் தெரிவித்துள்ளது. கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களையே 50% பணிகளில் நியமிக்க கட்டாயப்படுத்தினால் தொழில்நுட்ப திறனாளர்களுக்கு இடம் மறுக்கப்பட்டு விடும் எனவும் திறமையாளர்களை வேலைக்கு அமர்த்த முடியாவிட்டால் ஐ.டி. நிறுவனங்கள் கர்நாடகத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும் எனவும் நாஸ்காம் தெரிவித்துள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் ஒருவரான மோகன்தாஸ் பையும் அரசின் வேலை ஒதுக்கீட்டு யோசனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...