ஆந்திராவுக்கு வரிச் சலுகை கூடுதல் நிதி தேவை – பிரதமர் மோடி உடன் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு..!

இந்தியா

ஆந்திராவுக்கு வரிச் சலுகை கூடுதல் நிதி தேவை – பிரதமர் மோடி உடன் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு..!

ஆந்திராவுக்கு வரிச் சலுகை கூடுதல் நிதி தேவை – பிரதமர் மோடி உடன்  முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு..!

டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.  ஆந்திர முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக பிரதமர் மோடியை சந்திரபாபு நாயுடு சந்தித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் அமராவதியை தலைநகராக்கும் திட்டத்தை சந்திரபாபு நாயுடு தொடங்கியுள்ளார். தற்போது ஆந்திர மாநிலம் நிதிச்சுமையால் திண்டாடி வருகிறது. இந்த நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லி சென்றார். அவர் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடந்தது.

ஆந்திரா தொடர்பான பல முக்கிய பிரச்சனைகள் குறித்து இருவரும் விவாதித்ததாக தெரிகிறது.போலாவரம், அமராவதி தலைநகர் கட்டமைப்பு பணி குறித்து சந்திரபாபு நாயுடு தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். மேலும் ஆந்திராவுக்கு வரிச் சலுகை கூடுதல் நிதி தேவை என சந்திரபாபு நாயுடு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயலை சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார்.இதனைத் தொடர்ந்து மத்திய மந்திரிகள் நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான், அமித் ஷா ஆகியோரை இன்று சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசுகிறார்.நாளை நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசுகிறார்.

ஆந்திர மாநிலத்தில் நிலுவையில் உள்ள போலவரம் உள்ளிட்ட நீர்ப்பாசன திட்டங்கள், அமராவதி தலைநகர் திட்டம், மாநில நெடுஞ்சாலைகள், சாலைகள் உள்ளிட்ட உள் கட்டமைப்புகளின் நிலை குறித்து டெல்லி செல்வதற்கு முன்பாக அதிகாரியுடன் கலந்து ஆலோசித்து அறிக்கை ஒன்றை சந்திரபாபு நாயுடு தயார் செய்தார்.

மேலும் ஆந்திர மாநிலத்திற்கு தேவையான நிதி குறித்தும் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த நீண்ட பட்டியலுடன் அவர் டெல்லியில் சந்திரபாபு நாயுடு முகாமிட்டுள்ளார்.பிரதமர் மோடி மற்றும் மத்திய மத்திரிகளுடன் சந்திப்பின்போது ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ,ஆந்திர மாநிலத்திற்கு கூடுதல் நிதி சலுகைகள் மற்றும் வரி சலுகைகளை சந்திரபாபு நாயுடு கேட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசியல் அனுபவம் வாய்ந்த சந்திரபாபு நாயுடு தற்போது பா.ஜ.க கூட்டணியில் சக்தி வாய்ந்த தலைவராக உள்ளார்.இந்த சந்தர்ப்பத்தை அவர் ஒருபோதும் நழுவ விட மாட்டார். ஆந்திராவிற்கான அனைத்து திட்டங்களையும் கேட்டு பெறுவதில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் பல தொழில் நிறுவனங்களையும் ஆந்திராவுக்கு கொண்டு செல்வதில் கில்லாடியாக செயல்படுவார்.அவருடைய கோரிக்கைகளை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.சந்திரபாபு நாயுடு முகாமிட்டிருப்பது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave your comments here...