சாலை மோசமாக இருந்தால் சுங்கக் கட்டணம் வசூலிக்க கூடாது – நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் நிறுவனங்களுக்கு நிதின் கட்கரி அதிரடி..!

இந்தியா

சாலை மோசமாக இருந்தால் சுங்கக் கட்டணம் வசூலிக்க கூடாது – நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் நிறுவனங்களுக்கு நிதின் கட்கரி அதிரடி..!

சாலை மோசமாக இருந்தால் சுங்கக் கட்டணம் வசூலிக்க கூடாது – நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் நிறுவனங்களுக்கு நிதின் கட்கரி அதிரடி..!

சாலை மோசமாக இருந்தால் சுங்கக் கட்டணம் வசூலிக்க கூடாது என நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்குச் சுங்கக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. இப்போது அவை பாஸ்ட் டேக் தானியங்கி முறையில் வசூலிக்கப்படுகிறது. சாலைகளைப் பராமரிக்கவே இந்த சுங்கக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. அதேநேரம் பல இடங்களில் சாலைகள் முறையாகப் பராமரிக்கப்படாத போதிலும் சுங்கக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.

இதற்கிடையே மத்திய அரசு நடப்பு ஆண்டு முதல் சாட்டிலைட் மூலம் இயங்கும் ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.நடப்பு ஆண்டிலேயே சுமார் 5,000 கி.மீட்டருக்கு மேல் இத்திட்டத்தைச் செயல்படுத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது

இந்த நிதியாண்டில் 5,000 கி.மீட்டருக்கு செயல்படுத்தப்படும் செயற்கைக்கோள் உதவியுடன் வாகனங்களை கண்காணித்து சுங்கச்சாவடி கட்டணத்தை வசூலிக்கும் திட்டம் தொடர்பாக டெல்லியில் நடந்த கூட்டத்தில் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசியதாவது:-

* சாலைகள் சிறப்பாக உள்ள இடங்களில் மட்டும்தான் சுங்கக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும். சாலைகள் முறையாக பராமரிக்கப்படாமலும், மோசமாகவும் இருக்கும் இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது.

* எந்த இடத்திலும் சேவை சிறப்பாக இருந்தால் மட்டுமே உரிய கட்டணம் செலுத்த வேண்டும். சேவை முறையாக இல்லாவிட்டால் கட்டணம் தேவை இல்லை.

* குண்டும் குழியுமாகவும், சேறு நிறைந்ததாகவும் சாலைகளை வைத்துக் கொண்டு அங்கு சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்க முற்பட்டால், மக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.

Leave your comments here...