கீழடி உள்பட தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு பணிகள் – துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

தமிழகம்

கீழடி உள்பட தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு பணிகள் – துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

கீழடி உள்பட தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு பணிகள் – துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

நீண்ட வரலாற்றில் காணும் பண்பாடு மற்றும் கால வரிசை இடைவெளிகளை நிரப்புவதற்கு நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்காக தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல், வரலாற்றுக் காலம் வரையிலான தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அகழாய்வு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் தொன்மை, பண்பாடு, தொழில்நுட்பம் மற்றும் விழுமியங்களுக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் தற்போது 2024-ம் ஆண்டில் கீழ்க்காணும் எட்டு இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சென்ற ஆண்டில் எட்டு இடங்களில் அகழாய்வு செய்ததைப் போன்று இவ்வாண்டியிலும் எட்டு இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படுவதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் இருந்தபடி தொடங்கி வைத்தார்.

அவை வருமாறு:-

1. கீழடி மற்றும் அதன் அருகிலுள்ள தொல்லியல் தளமான கொந்தகை, சிவகங்கை மாவட்டம் பத்தாம் கட்டம்.

2. வெம்பக்கோட்டை, விருதுநகர் மாவட்டம் மூன்றாம் கட்டம்

3. கீழ்நமண்டி, திருவண்ணாமலை மாவட்டம் இரண்டாம் கட்டம்

4. பொற்பனைக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் இரண்டாம் கட்டம்

5. திருமலாபுரம், தென்காசி மாவட்டம்- முதல் கட்டம்

6. சென்னானூர், கிருஷ்ணகிரி மாவட்டம் முதல் கட்டம்

7. கொங்கல்நகரம், திருப்பூர் மாவட்டம் முதல் கட்டம்

8. மருங்கூர், கடலூர் மாவட்டம் முதல் கட்டம்

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் கடந்த 6.4.2023 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்தார். அந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை சேகரித்து காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், பெரும்பாலை என்னும் தளங்களில் மேற்கொண்ட அகழாய்வின் அறிக்கை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 138 கல்வெட்டுகளில் விளக்க உரைகள் அடங்கிய தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி 28 ஆகிய இரண்டு நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

Leave your comments here...