மேற்குவங்க ரயில் விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரயில்வே அமைச்சகம் சார்பில் நிவாரணம் அறிவிப்பு..!

இந்தியா

மேற்குவங்க ரயில் விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரயில்வே அமைச்சகம் சார்பில் நிவாரணம் அறிவிப்பு..!

மேற்குவங்க ரயில் விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரயில்வே அமைச்சகம் சார்பில் நிவாரணம் அறிவிப்பு..!

மேற்கு வங்கத்தின், டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நியூ ஜல்பைகுரி அருகே கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதி இன்று (ஜூன் 17) விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் பல தடம்புரண்டன. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.மேலும், இந்த விபத்தில் லோகோ பைலட் உள்பட 15 பேர் பலியானதாகவும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தளப் பதிவில், “மேற்கு வங்க ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சத்து 50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:– மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் ரெயில் விபத்தில் உயிர்களை இழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் துயரமடைந்த குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் வெற்றியடையவும் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “மேற்கு வங்கத்தில் நடந்த ரெயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அதிகாரிகளிடம் பேசி நிலைமையை கேட்டறிந்தேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்து நடந்த பகுதிக்கு ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் செல்ல இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

Leave your comments here...