தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி நாளை வருகை.. தியானத்தை ஒளிபரப்பினால் புகார் அளிப்பது உறுதி – மம்தா பானர்ஜி..!

அரசியல்

தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி நாளை வருகை.. தியானத்தை ஒளிபரப்பினால் புகார் அளிப்பது உறுதி – மம்தா பானர்ஜி..!

தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி நாளை வருகை.. தியானத்தை ஒளிபரப்பினால் புகார் அளிப்பது உறுதி – மம்தா பானர்ஜி..!

மக்களவை தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூலை 1-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் ஓய்வடைகிறது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி நாளை மாலை கன்னியாகுமரி செல்கிறார்.

கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார். ஜூலை 1-ந்தேதி மாலை 3.30 மணிக்குதான் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து வெளியே வருகிறார்.தேர்தல் வாக்கப்பதிவு நடைபெறுவதற்கு முன்னதாக மோடி இவ்வாறு செய்வது தேர்தல் நடத்தை விதியை மீறுவதாகும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி கூறியதாவது:-பிதரமர் மோடி தியானம் செய்வது டிவி-யில் ஒளிபரப்பப்பட்டால் நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம். அவரால் தியானம் செய்ய முடியும். ஆனால், அது டிவில் ஒளிபரப்ப முடியாது. ஒளிபரப்பப்பட்டால் அது தேர்தல் விதியை மீறுவாகும். தியானம் செய்யும் யாருக்கும் கேமரா தேவையா?. வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்னதாக 48 மணி நேர அமைதியான காலத்தில் வாக்கு சேகரிப்பதற்கான வழியாகும்.

இந்த முறை பாஜக அதிகாரத்திற்க வந்தால் எந்த அரசியல் கட்சியோ, தேர்தலோ, சுதந்திரமோ, மதமோ, மனிதாபிமானமோ அல்லது கலாசாரமோ இருக்காது.மேற்கு வங்காளத்தில் சிறந்த முடிவை எட்டுவோம் என பிரதமர் மோடி கூறுகிறார்.

இதன் அர்த்தம் அவர்கள் தோல்வியடைவார்கள் என்பதுதான். மேற்கு வங்காளத்தில் அவர்கள் ஜீரோதான் பெறுவார்கள்.நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியே வந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை உருவாக்காமல் இருந்திருந்தால், இன்று கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்கடித்திருக்க முடியாது.இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Leave your comments here...