கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது – பாரத் பயோடெக் விளக்கம்..!
கோவிஷீல்டு தடுப்பூசியால் மிகவும் அரிதாக பக்க விளைவுகள் ஏற்படுகிறது என பிரிட்டன் நீதிமன்றத்தில் ஆஸ்ட்ராஜென்கா நிறுவனம் கூறிய நிலையில், கோவாக்சின் (COVAXIN) மிகவும் பாதுகாப்பானது என பாரத் பயோடெக் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை, “பாதுகாப்பு எனும் ஒற்றை இலக்கை குறிக்கோளாக கொண்டு தான் கோவாக்சின் உருவாக்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் கோவிட் 19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் செயல்திறன் சோதனை செய்யப்பட்ட ஒரே கோவிட் 19 தடுப்பூசி கோவாக்சின் மட்டும் தான். உரிமம் பெறும் வழிமுறையின் கீழ் கோவாக்சின் தடுப்பூசி 27 ஆயிரம் பேரிடம் பரிசோதிக்கப்பட்டது.
மருத்துவ பரிசோதனை முறையில், தேவையான பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பரிசோதனை நடைபெற்றது.கோவாக்சின் பாதுகாப்பு தொடர்பாக மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் மதிப்பீடு செய்யப்பட்டது. கோவாக்சின் ஆயுள் காலம் தொடர்பாக தொடர்ச்சியான பாதுகாப்பு வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் ஆய்வு முடிவுகள் மற்றும் தொடர்ச்சியான பாதுகாப்பு வழிமுறைகள் அடிப்படையில் கோவாக்சின் பாதுகாப்பு விஷயத்தில் எவ்வித குறைபாடும் கொண்டிருக்கவில்லை என்பது தெளிவாகிறது. அனுபவம் மிக்க ஆய்வாளர்கள் அடங்கிய பாரத் பயோடெக் குழுவினர் கோவிட் தடுப்பூசிகளின் ஆயுட்காலம் குறைவு என்பதை நன்கு அறிந்துள்ளனர்.
எனினும், இவை பயனாளிகள் உடலில் அவர்களது ஆயுள் முழுமைக்கும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். இதன் காரணமாக எங்களது அனைத்து தடுப்பூசிகளும் பாதுகாப்பு எனும் ஒற்றை நோக்கத்தை குறிக்கோளாக கொண்டே உருவாக்கப்படுகிறது,” என குறிப்பிட்டுள்ளது.
Leave your comments here...