நிலவின் தென்துருவப் பகுதியில் தரைக்கடியில் தண்ணீர் – உறுதி செய்தது இஸ்ரோ..!

இந்தியா

நிலவின் தென்துருவப் பகுதியில் தரைக்கடியில் தண்ணீர் – உறுதி செய்தது இஸ்ரோ..!

நிலவின் தென்துருவப் பகுதியில் தரைக்கடியில் தண்ணீர் – உறுதி செய்தது இஸ்ரோ..!

பெங்களூரு: நிலவின் தென்துருவப் பகுதியில் தரைக்கடியில் தண்ணீர் இருப்பதை இஸ்ரோ உறுதி செய்துள்ளது

இந்தியா சார்பில் நிலவின் தென் துருவத்தை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் – 3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு நிலவுக்கு மிக அருகில் சென்றதைத் தொடர்ந்து கடந்த வருடம் ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 6.2 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது.

அதனைத் தொடர்ந்து லேண்டரில் இருந்த ரோவர் வெளியே வந்து நிலவில் ஆய்வுகளை செய்து வருகிறது. நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக வெற்றிகரமாக சந்திரயான்- 3 தரை இயக்கியதால் உலக நாடுகள் அளவில் கவனிக்கத்தக்க இடம் பெற்றது இந்தியாவும் இஸ்ரோ நிறுவனமும்.

இந்நிலையில் தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை  சந்திரயான்- 3  நிலவில் மேற்கொண்டு வரும் நிலையில் நிலவின் தென் துருவப் பகுதியில் தண்ணீர் இருப்பதை தற்போது இஸ்ரோ உறுதி செய்துள்ளது. சந்திரயான்-3 அனுப்பிய தகவல்களை ஆராய்ச்சி செய்ததில் நிலவின் தென் துருவத்தில் ஐந்து முதல் எட்டு மீட்டர் ஆழத்தில் தண்ணீர் பனிக்கட்டிகளாக உறைந்து இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இஸ்ரோவின் ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டர் பிரிவு, ஐஐடி கான்பூர், கலிபோர்னியா பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. நிலவில் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அடுத்த கட்டமாக சந்திரயான்- 4 திட்டத்தில் தென் துருவத்தில் தரைப்பகுதியை துளையிட்டு ஆராய்ச்சி செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Leave your comments here...