தமிழ் திரையுலகில் முதன் முறையாக சோனியா அகர்வால் வனிதா விஜயகுமார் இணைந்து நடிக்கும் “தண்டுபாளையம்”

சினிமா துளிகள்

தமிழ் திரையுலகில் முதன் முறையாக சோனியா அகர்வால் வனிதா விஜயகுமார் இணைந்து நடிக்கும் “தண்டுபாளையம்”

தமிழ் திரையுலகில் முதன் முறையாக சோனியா அகர்வால் வனிதா விஜயகுமார் இணைந்து நடிக்கும் “தண்டுபாளையம்”

சமூகத்தில் காணப்படும் அவலங்கள், குற்ற செயல்பாடுகள்,சட்டரீதியாக கையாளும் வீதம், இதனால் ஏற்படும் பாதிப்புகள், மரணமாஸ் திரில்லிங் நிஜங்களை மைய்யமாக வைத்து இயக்குநர் , டைகர் வெங்கட் அவர்களின் கைவண்ணத்தில் உருவான திரைப்படம் தண்டுபாளையம் . 1980 ஆம் ஆண்டுகளிலிருந்து இன்று வரை ஒரு மிகப்பெரிய கொள்ளை கூட்டம் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்களில் தன் வேட்டையை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறது. கொலை, கொள்ளை, குற்றம் போன்ற செயல்களை யாருடைய கண்ணுக்கும் தென்படாமல் சம்பவத்தை நிகழ்த்திக் கொண்டே செல்கின்றது.

இதில் ஒரு கூட்டத்தினரை 15 ஆண்டுகளுக்கு பின்பு கைது செய்தது காவல்துறை. இவற்றில் 390 திருட்டு வழக்குகள், 108 கொலை குற்ற வழக்குகள் மற்றும் மிகக் கொடுமையான 90 கற்பழிப்பு வழக்குகள் என ஒரே கும்பலுக்கு 6 முறை மரண தண்டனை வழக்குகள் இருப்பது இதுவே முதல் முறையாகும். ஆனால் இதுவரை ஒருவருக்கு கூட தூக்குதண்டனை வழங்க முடியவில்லை.

அதேநேரம் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறை அதிகாரிகள் மிகவும் மோசமான நிலைமைக்கு ஆளாகிறார்கள். கைதானவர்கள் அனைத்து வழக்குகளிலும் விடுதலையாகிக் கொண்டே வருகிறார்கள். இன்னும் 10 வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளது. ஆனால் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இவர்கள் அத்தனை பேரும் எழுத படிக்க தெரியாத தினக்கூலியாளர்கள்.

இவ்வாறு வெளியே தெரியாத எத்தனையோ உண்மைச் சம்பவங்களை கதையின் அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதைதான் இப்படத்தின் கதை என்கின்றனர் இயக்குனர்கள் டைகர் வெங்கட் – கே.டி நாயக். வெங்கட் மூவீஸ் சார்பில் தயாரித்து அதிரடி ஆக்ஷனுடன் காவல்துறை ஏ.சி.பியாக நடிக்கிறார். டைகர் வெங்கட் நடிக்க முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் சோனியா அகர்வால், வனிதா விஜயகுமார் ஆகியோருடன் டைகர் வெங்கட், முமைத்கான், சூப்பர் குட் சுப்பிரமணியம், பிர்லா போஸ், ஆலியா, நிஷா ரஃபிக் கோஷ்,  ரவிசங்கர், மக்ரதேஷ் பாண்டே , ரவிகாலே, ராயல் பிரபாகர் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஒளிப்பதிவு- இளங்கோவன், இசை-ஜித்தின் ரோஷன் நடனம்-பாபா பாஸ்கர் மக்கள் தொடர்பு – வெங்கட், கதை திரைக்கதை வசனம் பாடல், தயாரிப்பு – டைகர் வெங்கட், இயக்கம் – டைகர் வெங்கட்- கே.டி.நாயக். படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் இடம்பெற்றுள்ளது. நாட்டுக்கட்ட கூவுதய்யா கொக்கரக்கோ கொக்கோ கண்ணு ரெண்டும் தேடுதய்யா கொக்கரக்கோ கொக்கோ… எனும் துள்ளலிசை பாடல் இடம்பெற்றுள்ளது இந்த பாடலை பாடகி லெட்சுமி ஜெய் அரங்கமே அதிரும் அளவில் பாடியுள்ளார்.

இப்படித்திற்கான இசை தட்டு வெளியீடும் , தண்டுபாளையம் டிரையிலரும் சென்னை பிரசாத் லேபில் வெளியிடபட்டன. கதாநாயகிகள் சோணியா அகல்வால், வனிதா விஜயகுமார், பில்லா போஷ்,  திரைப்பட இயக்குநர் அரவிந்த்ராஜ், மங்கை அரிராஜன், கவிஞர் சொற்க்கோ, கிரைம் செல்லவராஜ், பத்திரிகையாளர் வி.எஸ்.இராமன், தண்டுபாளையம் படத்தின் இணை தயாரிப்பாளர்  நாராயண ரெட்டி , பி.ஆர்.ஓ விஜய்முரளி உள்ளிட்ட திரைப்பட துறையின் பல்வேறு பிரம்மாக்கள் கலந்து கொண்டு தண்டுபாளையம் திரைப்படம் வெற்றிவிழா காண வாழ்த்தினார்கள்.

மக்கள் தெ௱டர்பு வெங்கட் தண்டுபாளையம் திரைப்படத்தின் இசை தட்டு வெளியிடு மற்றும் டிரையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Leave your comments here...