கோவை கார் குண்டு வெடிப்பு – 4 பேரை காவலில் எடுத்து என்ஐஏ மீண்டும் விசாரணை..!
கோவை உக்கடம் கோட்டைமேட்டில் சங்கமேஸ்வரர் கோயில் அருகே கடந்த 2022ம் ஆண்டு காரில் குண்டு வெடித்தது. இதில், கோட்டை மேடு பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் (27) என்பவர் உடல் சிதறி உயிரிழந்தார்.
இதுகுறித்து உக்கடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், ஜமேஷா முபின் கோவையில் குண்டு வைக்க சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது. இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றம் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், முகமது நவாஸ் இஸ்மாயில், பெரோஸ் இஸ்மாயில், அப்சர்கான், உமர்பாரூக், முகமது தவ்பிக் முகமது இத்ரீஸ் உள்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர். ஜமேஷா முபினுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று காலை சென்னை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதான பொள்ளாச்சியை சேர்ந்த சையது அப்துல் ரகுமான் (52), உக்கடம் முகமது உசேன் பைசி (38), குனியமுத்தூர் இர்சாத் (22), ஜமீல் பாஷா உமரி (30) ஆகிய 4 பேரை கோவை அழைத்து வந்த என் ஐ ஏ அதிகாரிகள் அவர்களை காவலில் எடுத்து மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave your comments here...