சந்தேகப்படும்படி வானத்தில் வட்டமிடும் டிரோன்கள்.. பிடிக்க பயிற்சி பெற்ற கழுகுகள் – தெலங்கானா போலீசார் நடவடிக்கை..!

இந்தியா

சந்தேகப்படும்படி வானத்தில் வட்டமிடும் டிரோன்கள்.. பிடிக்க பயிற்சி பெற்ற கழுகுகள் – தெலங்கானா போலீசார் நடவடிக்கை..!

சந்தேகப்படும்படி வானத்தில் வட்டமிடும் டிரோன்கள்.. பிடிக்க பயிற்சி பெற்ற கழுகுகள் – தெலங்கானா போலீசார் நடவடிக்கை..!

சந்தேகத்திற்கிடமான வகையில் வானத்தில் வட்டமிடும் டிரோன்களை பிடிக்க நாட்டிலேயே முதல்முறையாக கழுகுகளுக்கு பயிற்சி அளித்து தெலங்கானா போலீசார் நடவடிக்ைக மேற்கொண்டுள்ளனர்.

தெலங்கானா மாநில போலீசார் ஆளில்லா விமானங்களை இடைமறித்து தாக்க ‘ஈகிள் ஸ்குவாட் அமைக்கிறது. ‘ஈகிள் ஸ்குவாட் மூலம் விவிஐபி வருகை, பொது நிகழ்ச்சிகளின்போது பாதுகாப்பை அதிகரிக்க கழுகுகளுக்கு இந்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக தெலங்கானா மாநில போலீசார் சிறப்புக் குழு மூன்று ஆண்டுகளாக இரண்டு சிறப்பு கழுகுகளுக்கு இதற்காக பயிற்சி அளித்து வருகிறது. வானத்தில் பறக்கும் ஆளில்லா விமானங்களை (டிரோன்) கண்டறிந்து அவற்றை அழிக்க சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த 2கழுகுகளும் இப்போது டிரோன்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

வானத்தில் சந்தேகத்திற்கிடமான எதையும் தாக்கி அழிக்க கழுகுகள் தயாராக உள்ளது. ஐதராபாத் புறநகரில் உள்ள மொய்னாபாத்தில் உள்ள ஒருங்கிணைந்த புலனாய்வு பயிற்சி அகாடமியில் (ஐஐடிஏ) மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளுடன் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ரவிகுப்தா அழகர், கழுகுகளின் செயல்பாட்டை பார்வையிட்டார். இரண்டு வல்லுநர்கள் இரண்டு கழுகுகளுக்குப் பயிற்சி அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

நாட்டில் இதுபோன்று எங்கும் இல்லை என்று கூறிய போலீசார், இதுபோன்ற கழுகுகள் நெதர்லாந்தில் மட்டுமே உள்ளது. நெதர்லாந்திற்கு அடுத்தபடியாக அதிக பயிற்சி பெற்ற கழுகுகளில் தெலங்கானா காவல்துறை இரண்டாவது இடத்தில் உள்ளது. விவிஐபி வருகை மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு இந்த கழுகுகளை பயன்படுத்த தெலங்கானா போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

தெலங்கானாவில் வி.வி.ஐ.பி பாதுகாப்பை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த போலீஸ் கண்காணிப்பு இது என்று கூறப்படுகிறது. இந்த திட்டத்திற்கு நிதி வழங்கக்கோரி உள்துறை நிதி அமைச்சகத்திற்கு கடிதம் எழுதினர். அவர்கள் உடனடியாக ஒப்புதல் அளித்ததால், கழுகுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக 3மாத வயதுள்ள கழுகுகள் ஆரம்ப பயிற்சியில் சேர்க்கப்பட்டு ஐதராபாத் முகமது பரித் மற்றும் கொல்கத்தாவைச் சேர்ந்த மற்றொரு பறவை பயிற்சியாளர் அபிர்பண்டாரி ஆகியோர் இந்த திட்டத்திற்காக நியமிக்கப்பட்டனர். இவர்கள் 2 ஆண்டுகளுக்குள், இந்த கழுகுகளுக்கு டிரோன்களை வீழ்த்தும் பயிற்சி அளித்துள்ளனர்.

Leave your comments here...