உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம் – முதன்முறையாக விபத்தில் சிக்கியது..!
ராஜஸ்தானின் ஜெய்சால்மர் அருகே இந்திய விமானப் படைக்குச் சொந்தமான தேஜஸ் ரக போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. மாணவர்கள் விடுதி அருகே இந்த விபத்து நடந்துள்ளது. நல்வாய்ப்பாக விமானி பத்திரமாக வெளியேறினார். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய விமானப் படை தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய விமானப் படையின் தேஜாஸ் விமானம் ஜெய்ஸால்மர் அருகே விபத்துக்குள்ளானது. பயிற்சியின் போது எதிர்பாராமல் இந்த விபத்து நடந்துள்ளது. விமானி பத்திரமாக உயிர் தப்பினார். நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேஜஸ் போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியுள்ளது இதுதான் முதல்முறை என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். விமானத்தைக் கட்டுக்குள் கொண்டு வர பைலட் கடுமையாக முயன்றுள்ளனர். இருப்பினும், கடைசி நொடிகளில் அது கட்டுப்பாட்டை இழந்ததால் அது விபத்தில் சிக்கியுள்ளது. இருப்பினும், அது கட்டுக்குள் வராமல் தரையில் விழுந்து நொறுங்கி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேஜஸ் விமானம், அனைத்து காலநிலையிலும் இயங்கக் கூடிய 4.5 தலைமுறை விமானம். இதில் நவீன போர் விமானங்களில் உள்ள அட்வான்ஸ்ட் கிளாஸ் காக்பிட், டிஜிட்டல் ஏவியானிக்ஸ் கருவிகள் உள்பட பல வசதிகள் உள்ளன.
Leave your comments here...