சனாதன தர்மத்தை கடவுள் ராமர் குறித்த திமுக எம்பி ஆ.ராசாவின் பேச்சை காங்கிரஸ் ஆதரிக்கிறதா..? – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கேள்வி

அரசியல்

சனாதன தர்மத்தை கடவுள் ராமர் குறித்த திமுக எம்பி ஆ.ராசாவின் பேச்சை காங்கிரஸ் ஆதரிக்கிறதா..? – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கேள்வி

சனாதன தர்மத்தை கடவுள் ராமர் குறித்த திமுக எம்பி ஆ.ராசாவின் பேச்சை காங்கிரஸ் ஆதரிக்கிறதா..? – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கேள்வி

மிகப் பெரிய ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய ஒரு நபர்(ஆ. ராசா) எல்லை மீறி பேசி இருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வெளிப்படையாக செயல்பட்டுக்கொண்டு சனாதன தர்மத்துக்கு எதிராக, ராமருக்கு எதிராக கருத்துக்களைக் கூறி இருக்கிறார் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளது.

அண்மையில் கோவையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசும்போது, “இந்தியா ஒரு நாடல்ல. ஒரே நாடு என்றால் ஒரே பண்பாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் இருக்க வேண்டும். எனவே இந்தியா நாடல்ல, இது துணைக் கண்டம். இங்கு தமிழ், மலையாளம், ஒரியா என பல மொழிகள் பேசும் தேசங்கள் உள்ளன. இத்தனை தேசிய இனங்களையும் சேர்த்தால் அது இந்தியா” என்று கூறியிருந்தார்.இதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஹாமிர்பூரில் செய்தியாளர்களிடம் பேசி மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் சனாதன தர்மத்தை அல்லது இந்துக்களை அல்லது ராமரை அவமதிக்கும் வகையில் பலமுறை பேசி இருக்கிறார்கள். மற்றொருபுறம் அவர்கள், நாட்டை துண்டாட வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் செயல்படும் சின்ன சின்ன குழுக்களுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். அவர்கள் தங்கள் வெற்றியைக் கொண்டாட பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிடுகிறார்கள்.

தற்போது, மிகப் பெரிய ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய ஒரு நபர்(ஆ. ராசா) எல்லை மீறி பேசி இருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வெளிப்படையாக செயல்பட்டுக்கொண்டு சனாதன தர்மத்துக்கு எதிராக, ராமருக்கு எதிராக கருத்துக்களைக் கூறி இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியை நான் கேட்கிறேன், அவரை யார் பாதுகாத்துக்கொண்டிருக்கிறார்கள்? ஆ. ராசாவும், திமுகவும் சொல்வதை காங்கிரஸ் ஏற்கிறதா? காங்கிரஸ் தலைவர்கள் பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்டதை ஏற்கிறதா? இந்தியா ஒரு நாடு என காங்கிரஸ் கருதவில்லையா? தேர்தல் நெருங்கும் போது பிரித்தாளும் அரசியல் ஏன் தலைதூக்குகிறது? என கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆ.ராசாவின் கருத்தை கண்டிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் கூறும்போது, “ஆ.ராசாவின் கருத்துகளை நான் 100 சதவீதம் ஏற்கவில்லை. இத்தகைய கருத்தை நான் கண்டிக்கிறேன். ராமர் அனைவருக்கும் சொந்தமானவர், அனைத்தையும் உள்ளடக்கியவர் என்று நான் நம்புகிறேன். அது, ஆ.ராசாவின் சொந்த கருத்தாக இருக்கலாம். அதை நான் ஆதரிக்கவில்லை. ஒருவர் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.

Leave your comments here...