நமது குடும்பம்.. மோடி குடும்பம்.. லாலு பிரசாத் யாதவுக்கு பதிலடி..!

அரசியல்

நமது குடும்பம்.. மோடி குடும்பம்.. லாலு பிரசாத் யாதவுக்கு பதிலடி..!

நமது குடும்பம்.. மோடி குடும்பம்.. லாலு பிரசாத் யாதவுக்கு  பதிலடி..!

பிரதமருக்கு குழந்தை இல்லை, வாரிசு இல்லை என பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் பேசிய நிலையில், அதற்கு பதிலடியாக பாஜக அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்களில் தங்களது பெயர்களுக்கு பின்னால் ‘மோடியின் குடும்பம்’ எனப் பதிவிட்டு வருகின்றனர்.

பீஹாரில் ‘ஜன் விஸ்வாஸ் மஹா’ என்ற பெயரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் நேற்று நடத்திய பேரணியில், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் பேசியதாவது: பிரதமர் மோடி ஹிந்து கிடையாது. பொதுவாக தாயார் மறைந்தால் ஹிந்துக்கள் மொட்டையடித்து கொள்வார்கள். அதோடு தாடியை ஷேவ் செய்வார்கள். ஆனால் பிரதமர் மோடி அப்படி எதுவும் செய்யவில்லை. அவர் ஏன் மொட்டையடித்து கொள்ளவில்லை என்பதை கூற வேண்டும்.

நாட்டில் வெறுப்புணர்வை மோடி பரப்பி வருகிறார். அவர் எப்போதும் வாரிசு அரசியலைப் பற்றிப் பேசுகிறார். எனவே, வாரிசு அரசியல் என்றால் என்ன என்பதையும், தனக்கு ஏன் குழந்தைகள் இல்லை என்பதையும் மோடி விளக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பிரதமருக்கு குழந்தை இல்லை என்றும், இந்து இல்லை எனவும் லாலு பேசியது சர்ச்சையானது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் மோடி தெலுங்கானா பொதுக்கூட்டத்தில் பேசுகையில், ”இதனிடையே, தெலங்கானாவின் அடிலாபாத் நகரில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “நான் குடும்ப ஆட்சி என்ற கூறுவதை வைத்து மோடிக்கு குடும்பமே இல்லை என்று இண்டியா கூட்டணி தலைவர்கள் பேசுகிறார்கள். எனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். நாட்டு மக்கள் 140 கோடி பேரும் எனது குடும்பத்தினர்தான். கோடிக்கணக்கான மகள்கள், அம்மாக்கள், சகோதரிகள் அனைவரும் மோடியின் குடும்பத்தவர்கள்தான்” என்று பேசினார்

இந்நிலையில், பிரதமர் மோடியை விமர்சித்ததற்கு எதிர்வினையாக பாஜக தேசியத் தலைவர் தொடங்கி அமைச்சர்கள், முக்கியப் பிரமுகர்கள் என பலரும் சமூக ஊடக சுயவிவரத்தில் ‘மோடியின் குடும்பம் – Modi ka parivar’ என்ற வார்த்தைகளை தங்கள் பயோவில் பெயருக்குப் பின்னால் இணைத்துள்ளனர். அமித் ஷா, நட்டா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, தர்மேந்திர பிரதான், அனுராக் தாக்குர், முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் ‘மோடியின் குடும்பம்’ வார்த்தையை இணைத்துள்ளனர்.

Leave your comments here...