தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடல் – வேதாந்தா நிறுவனம் தொடந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம்.!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு சரியானது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஆலை நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் 2020-இல் அளித்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் வழக்குத் தொடர்ந்தது.
ஆலை நிர்வாகம் தரப்பில் , “ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சுற்றுச்சூழல் உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளையும் கடைப்பிடிக்கத் தயாராக உள்ளது. ஆனாலும், அரசியல் காரணத்துக்காக அதைத் திறக்க மறுப்பு தெரிவிக்கப்படுகிறது’ என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன் நடைபெற்றது.இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரிய வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று (பிப். 29 )தள்ளுபடி செய்துள்ளது.
“ஸ்டெர்லைட் ஆலையால் செய்யப்பட்ட விதிமீறல்கள் அடைப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை காப்பது மாநில அரசின் முக்கியப் பணிகளில் ஒன்று. ஆலை தொடர்ந்து மாசுபடுத்தி வந்துள்ளது. உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை” என்று உச்ச நீதிமன்ற அளித்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் நடந்த கடுமையான போராட்டங்கள் அதன் காரணமாக எழுந்த வன்முறையைத் தொடர்ந்து கடுமையான சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துவதாகக் கூறி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 2018ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...