இந்தியாவின் முதல் முப்படைகளின் தலைமைத் தளபதியாக – விபின் ராவத் நியமனம்
இராணுவ படை, விமானப் படை, கடற்படை ஆகிய முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் நோக்கில்,”முப்படைத் தளபதி’ பதவி உருவாக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தின உரையில் அறிவித்திருந்தார். இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தது.
இந்நிலையில், ராணுவத் தலைமைத் தளபதி பதவியிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை ஓய்வு பெற்ற விபின் ராவத்தை, முப்படைத் தளபதியாக நியமனம் செய்து மத்திய அரசு திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது. முப்படைத் தளபதி, அதிகபட்சமாக 65 வயது வரை அந்தப் பதவியில் நீடிப்பதற்கு ஏற்ற வகையில் பாதுகாப்பு சட்ட விதிகளில் அண்மையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
General Bipin Rawat assumed the office of CDS as Chief of Defence Staff today.
He laid Wreath at National War Memorial and paid homage to the Martyrs. A tri- Services guard of honour was given in honour of the CDS at South Block @adgpi @IAF_MCC @indiannavy @SpokespersonMoD pic.twitter.com/CR7lE1yYLa— HQ IDS (@HQ_IDS_India) January 1, 2020
இந்நிலையில் நாட்டின் முதலாவது முப்படைத் தளபதியாக ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி விபின் ராவத் புதன்கிழமை பொறுப்பேற்றாா். நாட்டின் முதல் முப்படைகளின் தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள பிபின் ராவத், இந்தியா கேட்டில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே, விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ராகேஷ்குமார் சிங் பதூரியா மற்றும் கடற்படை தளபதி கரம்பீர் சிங் ஆகியோர் அவருடன் உடனிருந்தனர்
Leave your comments here...