பராமரிப்பு பணிகள் – நாளை 44 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து..!

தமிழகம்

பராமரிப்பு பணிகள் – நாளை 44 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து..!

பராமரிப்பு பணிகள் – நாளை 44 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து..!

பராமரிப்பு பணிகள் காரணமாக பிப்ரவரி 17ம் தேதி முதல் பிப்ரவரி 18ம் தேதி வரை ஆவடி வழித்தடத்தில் இயங்கும் 15 புறநகர் ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையில் பயணிகளின் போக்குவரத்து தேவையை தீர்த்து வைப்பதில் புறநகர் ரயில்களுக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. அந்த வகையில் மின்சார ரயில் சேவையை நாள் தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

பராமரிப்பு பணி காரணமாக அவ்வப்போது விடுமுறை தினங்களில் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதும், ரயில் சேவை குறைக்கப்பட்டும் வருகிறது. அந்த வகையில் ஆவடி பணிமனையில் நடைபெற உள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக 15 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

* சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான வழித்தடத்தில் இரு மார்க்கத்திலும் 44 புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

* நாளை காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை குறிப்பிட்ட இந்த வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கப்படாது.

* கோடம்பாக்கம் முதல் தாம்பரம் வரையிலான வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

* சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் ரெயில் சேவை இன்று முதல் 6 நாட்களுக்கு மாற்றம் செய்யப்படுகிறது.

* இதேபோல் இன்று முதல் 22-ந்தேதி இரவு 10.45 மணி முதல் காலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையேயான புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

* கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு இரவு 8.15, 8.20, 9.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரெயில் சேவை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

* தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு இரவு 11.15 மணிக்கு பின், புறப்படும் புறநகர் ரெயில்கள் எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...