தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதமானது.. நன்கொடை அளித்தோர் விவரங்களை வெளியிட உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!
அரசியல் கட்சிகள் பெருமளவு நிதிகளை வாங்கி குவிக்க வழிவகை செய்துள்ள தேர்தல் பத்திரம் செல்லாது என அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.
தேர்தல் பத்திரம் செல்லாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒருமித்த கருத்தாக அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளனர். இந்த நிலையில் பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் பத்திரங்கள் வினியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இதுவரை வழங்கிய பத்திரங்கள் தொடர்பான விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 31-ந்தேதிக்குள் இதுதொடர்பான விவரங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
தலைமை நீதிபதி ஒய். சந்திரசூட் தலைமையிலான பெஞ்சில் சஞ்ஜீவ் கண்ணா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகிய நிதிபதிகள் இடம் பிடித்திருந்தனர்.எங்களுக்குள் ஒருமித்த முடிவு ஏற்பட்டுள்ளது. எனக்கும், நீதிபதி சஞ்சய் கண்ணாவுக்கும் இடையில் இரண்டு கருத்துகள் இருந்தன. அதன்பின் ஒரே முடிவுக்கு வரப்பட்டது. முடிவுக்கு வருவதில் சிறு வேறுபாடு இருந்தது” என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்..
தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்காத தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை. தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை வங்கிகள் நிறுத்த வேண்டும்.
கருப்பு பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தை அடைய தேர்தல் பத்திரங்கள் தவிர வேறு வழிகள் உள்ளன.
தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட அனைத்து பங்களிப்பின் விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6-ம் தேதிக்குள் ஸ்டேட் வங்கி வழங்கவேண்டும்.
ஸ்டேட் வங்கி பகிர்ந்து கொள்ளும் தகவல்களை தேர்தல் ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மார்ச் 13ம் தேதிக்குள் வெளியிடவேண்டும்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதி தரும்போது அதற்கு கைமாறு எதிர்பார்க்க வாய்ப்பு உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் வரம்பற்ற பங்களிப்பை வழங்க அனுமதிப்பது தன்னிச்சையானது.
தேர்தல் பத்திரம் தொடர்பான சட்டத்திருத்த மசோதாக்கள் ரத்து செய்யப்படுகின்றன. கம்பெனி சட்டத்திருத்த மசோதாவும் ரத்து செய்யப்படுகிறது.
Leave your comments here...