ஜார்கண்ட் நம்பிக்கை வாக்கெடுப்பில் சாம்பாய் சோரன் அரசு வெற்றி
ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை நிலக்கரி ஊழல் மற்றும் பணமோசடி வழக்கில், அமலாக்கத்துறை கைது செய்தது.ஹேமந்த் சோரன் கைதான நிலையில், சம்பாய் சோரன் முதல்வராக பதவி ஏற்றார்.தொடர்ந்து, சம்பாய் சோரன் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார்.
ஹேமந்த் சோரன் கைதான நிலையில், சம்பாய் சோரன் முதல்வராக பதவி ஏற்றார்.தொடர்ந்து, சம்பாய் சோரன் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், ஜார்க்ண்ட் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், சம்பாய் சோரன் அரசு வெற்றி பெற்றுள்ளது.அதன்படி, ஜார்கண்ட் சட்டபேரவையில் மொத்தம் 81 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், சம்பாய் சோரன் அரசுக்கு 47 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.இதன்மூலம், முதல்வர் பதவியை தக்க வைத்தார் சம்பாய் சோரன்.
இந்த வாக்கெடுப்பில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் பங்கேற்றுள்ளார்.இந்த கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
அப்போது முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் பேசுகையில், ” என்னை அமலாக்கத்துறை 8.5 ஏக்கர் நில மோசடி குற்றச்சாட்டில் கைது செய்துள்ளது. தைரியம் இருந்தால் என் பெயரில் பதிவு செய்யப்பட்ட நிலத்தின் ஆவணங்களை காட்டுங்கள். என் மீதான குற்றத்தை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுவேன். என் மீதான நடவடிக்கைக்கும் கவர்னர் மாளிகைக்கும் தொடர்பு உள்ளது. நான் கைது செய்யப்பட்ட ஜனவரி 31ம் தேதி இந்தியாவுக்கு கருப்பு தினம் ” என்றார்.
Leave your comments here...