சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிப்பு..!

தமிழகம்

சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிப்பு..!

சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிப்பு..!

தமிழகத்தில் நெல்லை-சென்னை இடையே தென் மாவட்டங்களில் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில் சேவைக்கு ரயில் பயணிகளிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இந்த ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும் என தொடர் கோரிக்கைகள் இருந்து வந்தது.

இந்த நிலையில் இந்த கோரிக்கையை ஏற்று தெற்கு ரயில்வே சென்னை-நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை வழங்கி வருகிறது.

இந்த ரயிலுக்கு தற்போது கிடைத்துள்ள வரவேற்பை அடுத்து கன்னியாகுமரி மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது தெற்கு ரயில்வே.

அதாவது வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் இயங்கும் வந்தே பாரத் ரயில் சேவை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.50 Dக்கு வந்தே பாரத் திறப்பு ரயில் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave your comments here...