விஜயகாந்த்துக்கு பத்ம பூஷன் விருது .. காலம் கடந்து கொடுக்கப்பட்ட விருது – பிரேமலதா விஜயகாந்த்
தமிழ் திரைப்பட துறையின் சிறந்த நடிகரும், மறைந்த தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
இந்நிலையில் கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக கேப்டன் விஜயகாந்திற்கு 2024ம் ஆண்டுக்கான பத்மபூஷண் விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கலை, சமூகப் பணி, அறிவியல், வர்த்தகம், தொழில், மருத்துவம் என பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய நபர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு 2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 132 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விருதுகள் பட்டியலில் இந்தியாவின் முதல் பெண் யானை பராமரிப்பாளர்(பாகன்), தமிழகத்தின் கோவை மாவட்டத்தை சேர்ந்த வள்ளி ஆகியோருக்கும், வைஜெயந்திமாலா, சிரஞ்சீவி, பத்மா சுப்ரமண்யம், வெங்கய்ய நாயுடு ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.உயரிய விருது அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு நடிகர் சிரஞ்சீவி நன்றி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞரான 87 வயதான பத்ரப்பனுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர், இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் பேசும் போது, விஜயகாந்த் இருக்கும் போதே அவருக்கு விருது அளித்திருந்தால் அதனை மகிழ்ச்சியுடன் பெற்றிருப்போம் என்று கூறி, இது விருது காலம் கடந்து கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
Leave your comments here...