அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்… 55 நாடுகளுக்கு அழைப்பு..!
அயோத்தி (உத்தரபிரதேசம்): அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் ஜனவரி 22-ம் தேதி நடைபெறும் ‘பிராண பிரதிஷ்டை’ மற்றும் மும்பாபிஷேக விழாவுக்கு, 55 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 100 தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழா, வரும் 22-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க வெளிநாட்டு தலைவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு குறித்து உலக இந்து அறக்கட்டளை அமைப்பின் தலைவர் சுவாமி விக்யானந்த் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தூதர்கள் உட்பட 55 நாடுகளைச் சேர்ந்த 100 தலைவர்களுக்கு ராமர் கோயில் சிலைபிரதிஷ்டை விழாவுக்கு அழைப்புவிடுத்துள்ளோம். பிரபு ராம்வம்சத்தை சேர்ந்தவர் என கூறும் கொரிய ராணிக்கும் நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம்.
அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, டொமினிகா, எகிப்து, எத்தியோப்பியா, பிஜி, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, இலங்கை என 55 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுக்குஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளைச் சேர்ந்த விவிஐபிக்கள் லக்னோவுக்கு வரும் 20-ம் தேதி வரவுள்ளனர். 21-ம் தேதி மாலை அவர்கள் அயோத்தி வந்தடைவர். பனி காரணமாக, இந்தியாவுக்கு முன்கூட்டியே வரும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளின் தலைவர்கள் பலருக்கு அழைப்பு விடுக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால், இடம் சிறிதாக இருப்பதால், விருந்தினர்களின் எண்ணிக்கையை சுருக்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்
Leave your comments here...