இண்டிகோ விமான டிக்கெட் கட்டணம் குறைகிறது..!

இந்தியா

இண்டிகோ விமான டிக்கெட் கட்டணம் குறைகிறது..!

இண்டிகோ விமான டிக்கெட் கட்டணம் குறைகிறது..!

இண்டிகோ விமானப் பயணிகளுக்கு விதிக்கப்படும் எரிபொருள் கட்டணத்தை ரத்து செய்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

விமான எரிபொருள் விலையேற்றம் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் இண்டிகோ நிறுவனம் எரிபொருள் கட்டணத்தை அறிமுகம் செய்தது. அதன்படி, குறைந்தபட்சமாக 500 கீ.மீ. வரை பயணம் செய்பவர்களுக்கு கூடுதலாக ரூ.300, அதிகபட்சமாக 3,501 கி.மீ.க்கு மேல் பயணிப்பவர்களுக்கு ரூ. 1,000 எரிபொருள் கட்டணமாக விதிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக விமான எரிபொருள் விலையை மத்திய அரசு குறைந்ததை தொடர்ந்து, பயணிகளுக்கு விதிக்கப்பட்டு வந்த எரிபொருள் கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளில் இந்த எரிபொருள் கட்டண ரத்து நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.இதனால், பயணிகளின் இண்டிகோ விமான பயன்பாடு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave your comments here...