போதைப்பொருளுடன் இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் டிரோன்கள் -கைப்பற்றிய எல்லை பாதுகாப்புப்படை
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை அருகே அமைந்துள்ள தானோ குர்த் கிராமத்தை நோக்கி இன்று ஒரு டிரோன் பறந்து வந்துள்ளது. இதைப் பார்த்த ரோந்து பணியில் இருந்த எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தி செயல் இழக்க செய்தனர்.
வயல்வெளியில் விழுந்த டிரோனை எல்லை பாதுகாப்புப்படையினர் கைப்பற்றினர். அது சீனாவில் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. பாகிஸ்தானில் இருந்து போதைப் பொருட்கள் கடத்தல் கும்பல் இந்த டிரோனை அனுப்பி வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் அந்த டிரோன் மூலம் அனுப்பப்பட்ட பையில் இருந்து 540 கிராம் ஹெராயின் போதைப்பொருள் பாதுகாப்புப்படையினரால் கைப்பற்றப்பட்டது.
இதைதொடர்ந்து மேலும் ஒரு டிரோன் அதே கிராமத்திற்குள் பறந்து வந்தது. அந்த டிரோனையும் பாதுகாப்புப்படையினர் கைப்பற்றினர்.
🚨🚨🚨
𝐓𝐰𝐨 𝐏𝐚𝐤𝐢𝐬𝐭𝐚𝐧𝐢 𝐝𝐫𝐨𝐧𝐞𝐬 𝐚𝐥𝐨𝐧𝐠 𝐰𝐢𝐭𝐡 𝐇𝐞𝐫𝐨𝐢𝐧 𝐫𝐞𝐜𝐨𝐯𝐞𝐫𝐞𝐝 𝐛𝐲 𝐁𝐒𝐅 𝐚𝐧𝐝 𝐏𝐮𝐧𝐣𝐚𝐛 𝐏𝐨𝐥𝐢𝐜𝐞 𝐢𝐧 𝐭𝐰𝐨 𝐬𝐞𝐩𝐚𝐫𝐚𝐭𝐞 𝐢𝐧𝐜𝐢𝐝𝐞𝐧𝐭𝐬@BSF_Punjab troops and @PunjabPoliceInd (@AmritsarRPolice ) launched two joint search… pic.twitter.com/mNGp1ofaJb— BSF PUNJAB FRONTIER (@BSF_Punjab) December 19, 2023
மேலும் அந்த டிரோன் மூலம் அனுப்பப்பட்ட பையில் இருந்து 430 கிராம் ஹெராயின் போதைப்பொருள் பாதுகாப்புப்படையினரால் கைப்பற்றப்பட்டது. இரண்டு டிரோனில் இருந்து மொத்தம் 970 கிராம் ஹெராயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.இதைப்பற்றி பஞ்சாப் எல்லை பாதுகாப்புப்படையினர் எக்ஸ் வலைதளத்தில் டிரோனின் வீடியோ மற்றும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர்.
Leave your comments here...