குடியுரிமை சட்டம் : பாக்கிஸ்தான் இந்துகள் ஆதரவு: குடியுரிமை சட்டத்தினால் என் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்..!
குடியுரிமை சட்ட திருத்த மசோதா 2019 நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளிலும் வெற்றிகரமான தாக்கல் செய்யப்பட்டு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கிவிட்டதால், இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சட்டம் காரணமாக இந்தியாவில் கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், ஜைனர், கிறிஸ்தவர், பார்சி மற்றும் புத்த மதத்தினர் மட்டுமே இதன் மூலம் குடியுரிமை பெற முடியும்.
அதேபோல் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள் மட்டுமே இங்கு குடியுரிமை பெற முடியும். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா மற்றும் மேகாலயாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை எதிர்த்து மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் பாக்கிஸ்தான் இந்துக்கள் இந்தியா கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை உள்ளப்பூர்வமாக வரவேற்றுள்ளனர்.
அவர்களிடம் டைம்ஸ் ஆப் நவ் பத்திரிக்கையாளர்கள் குடியுரிமை சட்டம் குறித்து கேட்டபோது:- பெரும்பாலானோர் குடியுரிமை சட்டம் தங்களுக்கு பாதுகாப்பானது என்று தெரிவித்தனர். பாக்கிஸ்தானில் தங்களுக்கு கிடைத்த மோசமான அனுபவம் குறித்தும் பேசினர்.
இது குறித்து பெண் ஒருவர் கூறியதாவது:- குடியுரிமை சட்டத்தினால் என் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. என் பிள்ளைகள் படிப்பு, வேலை வாய்ப்பு போன்றவற்றிற்கு குடியுரிமை சட்டம் உத்திரவாதம் அளிக்கிறது. நல்ல எதிர்காலம் தேடி இந்தியா வந்துள்ளோம். எனவே எங்களுக்கு இந்தியாவில் குடியுரிமை கிடைக்கும் என்று நம்புகிறோம்’ என்றார்.
இது குறித்து இளைஞர் ஒருவர்:- நான் 13 வயதில் பாக்கிஸ்தானிலிருந்து இந்தியா வந்தேன், இந்தியாவில் நாங்கள் சுதந்திரமாக வாழ முடிகிறது. பாக்கிஸ்தானில் இந்துக்களுக்கு சுதந்திரம் இல்லை. இந்து மதத்தை கடைப்பிடித்த காரணத்தால் நாங்கள் தாக்கப்பட்டு வந்தோம். பாக்கிஸ்தானில் இந்துக்களுக்கு மரியாதை இல்லை. இந்தியாவை எங்கள் நாடாக உணர்கிறோம்’ என்று கூறினார்.
இது குறித்து முதியவர் ஒருவர்:- நான் சொத்துக்கள் அனைத்தையும் பாக்கிஸ்தானில் இழந்து விட்டு வந்துள்ளேன். இந்தியாவில் எனக்கு, ‘பாரத் மாதா கி ஜே’ என்று சொல்வதற்கு உரிமை வேண்டும்’ என்று தெரிவித்தார்.
பாக்கிஸ்தானில் கவுன்சிலர் பதவியில் இருந்தவர்:- பாக்கிஸ்தானில் நான் கவுன்சிலராக இருந்தேன். இருந்தாலும் நான் அவமானப்படுத்தப்பட்டேன். இந்து என்ற காரணத்திற்காக என் குடும்பத்தினருக்கு குடிநீர் கூட வழங்கப்படுவது இல்லை. இந்துக்களை பாக்கிஸ்தானியர்கள் மதிப்பதில்லை.’ என்றார்.
Pakistani Hindus share why Citizenship Amendment Bill is a ray of hope for them #TimesNowi #iReport
Full video: https://t.co/xdiho4iJSQ pic.twitter.com/DeLn61AoCC
— TIMES NOW (@TimesNow) December 14, 2019
மேலும் பலர் , என் மகள்களுக்கு பாதுகாப்பு கிடைக்கவில்லை. இந்துக்கள் இரண்டாம் தர மக்களாக பாவிக்கப்பட்டனர். உறவினர்கள் இஸ்லாமுக்கு மாற வற்புறுத்தப்பட்டனர். ஹோலி, தீபாவளி போன்ற இந்து பண்டிகைகளை பாக்கிஸ்தானில் கொண்டாட அனுமதிக்கவில்லை. கோவில் கட்டுவதற்கும் அனுமதி இல்லை. பொருளாதார காரணத்தினாலே நாங்கள இந்தியாவிற்கு முன்னதாகவே வர முடியவில்லை. சந்தையில் காய்கறிகளை கூட தொட்டு பார்க்க எங்களுக்கு அனுமதி இல்லை. பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லை’ இவ்வாறு பலரும் கருத்து தெரிவித்தனர்.!
நன்றி : Times Now
Leave your comments here...