கனமழை எச்சரிக்கை… களத்திற்கு சென்று பணியாற்ற வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு

தமிழகம்

கனமழை எச்சரிக்கை… களத்திற்கு சென்று பணியாற்ற வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு

கனமழை எச்சரிக்கை… களத்திற்கு சென்று பணியாற்ற வேண்டும் –  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு

சென்னையில் இன்று இரவு 10 மணி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குறிப்பாக சென்னையில் கிண்டி, மாம்பலம், பல்லாவரம், ஆலந்தூர், தாம்பரம் மற்றும் புறநகர் பகுதிகளான குன்றத்தூர், பூவிருந்தவல்லி, அம்பத்தூர், மாதாவரம், வண்டலூர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேபோபல், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை,விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் அடுத்த 3 மண நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனமழை பெய்து வருவதால் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனடியாக களத்திற்கு சென்று பணியாற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மேலும், பொது மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளுமாறு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

Leave your comments here...