சென்னையில் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் – மெட்ரோ நிர்வாகம் தகவல்

தமிழகம்

சென்னையில் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் – மெட்ரோ நிர்வாகம் தகவல்

சென்னையில் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் – மெட்ரோ நிர்வாகம் தகவல்

சென்னையில் வரும் திங்கட்கிழமை(நவ.27) முதல் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டது. தற்போது மெட்ரோ ரெயிலில் ஏராளமானோர் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரெயில் நிர்வாகம் 7 நிமிட இடைவெளியில் ரெயில் சேவை வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது

இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மற்றும் அவர்களின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காகவும் 2 வழித்தடங்களிலும் நெரிசல் மிகு நேரங்கள் இல்லாது மற்ற நேரங்களில் 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரெயில் சேவைகள் 27-ந் தேதி முதல் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். மெட்ரோ ரெயில் பயணிகள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...