அபாய கட்டத்தை எட்டிய காற்று மாசு.. மக்கள் சுவாதித்தால் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் – மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்!!

இந்தியா

அபாய கட்டத்தை எட்டிய காற்று மாசு.. மக்கள் சுவாதித்தால் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் – மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்!!

அபாய கட்டத்தை எட்டிய காற்று மாசு.. மக்கள் சுவாதித்தால் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் – மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்!!

டெல்லி-என்சிஆர் மண்டலத்தில் காற்றின் தரம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இன்று (நவம்பர் 6) காலை நிலவரப்படி டெல்லியில் காற்றின் தரக் குறையீடு (Air Quality Index – AQI) 488 ஆக உள்ளது.

இந்த நிலையை எட்டும்போது மாசுபாடு உடைய காற்றை மக்கள் சுவாதித்தால் சுவாசப்பிரச்னைகள், ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். இதன் காரணமாகவே மாசுபாடு அடைவதை தடுத்து காற்றின் தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சாலைகளில் தண்ணீர் தெளித்தல், கட்டுமானப்பணிகளுக்கு கட்டுப்பாடு, ஓட்டல்களில் நிலக்கரி பயன்பாடு, டீசல் ஜெனரேட்டர்கள் பயன்படுத்த தடை,போக்குவரத்து சிக்னல்களில் சிகப்பு விளக்குகள் எரியத் தொடங்கிய உடன் சிக்னலில் காத்திருக்கும் வாகனங்கள் பச்சை விளக்கு ஆன் ஆகும் வகையில் வாகனங்களின் இன்ஜின்களை அணைத்து வைக்கும் திட்டம், என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளபோதும் காற்றின் தரம் தொடர்ந்து மோசமான நிலையை நோக்கி சென்றுகொண்டுள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் அதிகரித்துள்ள ‘மிகக் கடுமை’ அளவுள்ள மாசு, அனைத்து வயதினரையும் நுரையீரல் மட்டுமல்லாது, இதயம், மூளை போன்ற பிற முக்கிய உறுப்புகளையும் பாதிப்படைய செய்யும் என டெல்லியை சேர்ந்த மருத்துவர்கள் மக்களை எச்சரித்துள்ளனர்.

இதுபற்றி மருத்துவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது: மாசுபாடு அதிகரித்ததன் விளைவாக தலைவலி, பதட்டம், எரிச்சல், குழப்பம் மற்றும் நினைவாற்றல் திறன் குறைதல் போன்ற நிகழ்வுகள் திடீரென அதிகரித்துள்ளன. குறிப்பாக வயதானவர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் போன்றவர்களை அதிகம் பாதிப்படைய செய்கிறது.

இதற்கு முக்கிய காரணம், காற்றில் அதிகரிக்கும் நைட்ரஜன் டை ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு ஆகியவற்றுடன் நரம்பியல் சார்ந்த நினைவாற்றலுடன் நேரடியாக தொடர்புடையது என்பதால் அவை நரம்பு மண்டலத்தை பாதிக்கின்றன என சப்தார்ஜங் மருத்துவமனையில் டாக்டர் நீரஜ் குப்தா தெரிவித்தார்.

Leave your comments here...