குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 – சத்தீஸ்கர் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அமித்ஷா

அரசியல்

குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 – சத்தீஸ்கர் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அமித்ஷா

குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.12,000  – சத்தீஸ்கர் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அமித்ஷா

சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலையொட்டி பாஜகவின் தேர்தல் அறிக்கையை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார்.

90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும். காங்கிரஸ் ஆட்சி செய்துவரும் இம்மாநிலத்தை பாஜக வசம் கொண்டு வர அக்கட்சி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. மோடி, அமித் ஷா ஆகியோர் மாறி மாறி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ‘மோடியின் வாக்குறுதி’ என்ற தலைப்பில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார். அதில்; சத்தீஸ்கரில் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 வழங்கப்படும். நெல் ஒரு குவிண்டால் ரூ.3,100க்கு கொள்முதல் செய்யப்படும். 500 ரூபாய்க்கு சமயல் எரிவாயு தருவோம்.

கல்லூரி மாணவர்கள் இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம். விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும். ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் ஒரு லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் இவ்வாறு கூறினார்.

Leave your comments here...