சாதியில் பெயரால் இங்கு ஒரு கூட்டம் மக்களை பிரித்தாள முயற்சி நடக்கிறது – தசரா விழாவில் பிரதமர் மோடி பேச்சு..!

இந்தியா

சாதியில் பெயரால் இங்கு ஒரு கூட்டம் மக்களை பிரித்தாள முயற்சி நடக்கிறது – தசரா விழாவில் பிரதமர் மோடி பேச்சு..!

சாதியில் பெயரால் இங்கு ஒரு கூட்டம் மக்களை பிரித்தாள முயற்சி நடக்கிறது – தசரா விழாவில் பிரதமர் மோடி பேச்சு..!

சாதியின் பெயரால் இங்கு ஒரு கூட்டம் மக்களை பிரித்தாள முயற்சி நடக்கிறது என பிரதமர் மோடி தசரா விழாவில் பேசினார்.

டெல்லியில் “ஸ்ரீ ராம்லீலா சொசைட்டி” எனும் பெயரில், இந்துக்களின் கடவுளான ஸ்ரீராமபக்தர்களின் சங்கம் உள்ளது. இவர்கள் வருடாவருடம் துவாரகா செக்டார் 10 பகுதியில் “தசரா” எனப்படும் நவராத்திரி பண்டிகையின் கடைசி நாளான விஜயதசமியன்று, ராம் லீலா மைதானத்தில், ராம்லீலா உற்சவத்தை நடத்தி வருகின்றனர். இதில் “ராவண தகனம்” எனும் நிகழ்வில் ராவணணின் மிக பெரிய உருவ பொம்மை எரிக்கப்படும்.

நவராத்திரியையொட்டி , தசரா விழா டில்லி ராம்லீலா மைதானத்தி்ல் இன்று மாலை துவங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அவர் பேசியது, நவராத்திரி மற்றும் விஜயதசமியை முன்னிட்டு உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். விஜயதமி நாளான இன்று நம் நாட்டில் ஆயுதங்களை வைத்து பூஜை செய்து வணங்குவது எந்த நிலத்தையும் ஆள்வதற்கு அல்ல நம் சொந்த நிலத்தை காக்கவே. இது ஒரு சாஸ்திர பூஜை.

இந்த திருவிழா நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான போரையும், இறுதியில் தீமையை நன்மை வெல்வதையும் குறிக்கும் விழாவாகும். ஸ்ரீராமஜென்ம பூமியான அயோத்தியில் பகவான் ஸ்ரீராமருக்கு மிக பெரிய அளவில் சிறப்பான கோவில் கட்டப்படுவதை காண நாம் பல தசாப்தங்கள் காத்திருந்தோம்.

தற்போது அங்கு கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதை காண நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்; நாம் பாக்கியசாலிகள். நமது பொறுமைக்கும் அதனால் கிடைத்த வெற்றிக்கும் இது ஒரு சான்று. அங்கு பகவான் ஸ்ரீராமரின் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட இன்னும் சில மாதங்களே உள்ளன. இன்றைய “ராவண தகனம்” நம் நாட்டை பிரிக்க நினைக்கும் சக்திகளை எரிப்பதையும் குறிப்பதாகும்.

நிலவில் கால்பதித்து 2 மாதங்கள் ஆன நிலையில் அதனுடன் இன்று நாம் விஜயதசமியை கொண்டாடுகிறோம். சாதியின் பெயரால் இங்கு ஒரு கூட்டம் மக்களை பிரித்தாள முயற்சி நடக்கிறது.. விரைவில் இந்தியா உலகிலேயே மிகவும் வலுவான ஜனநாயக நாடாக இந்தியா வரும் என்றார்.

Leave your comments here...