தேர்தல் நேரத்தில் மட்டும் ராகுல் காந்தி வருவதால் அவர் தேர்தல் காந்தி – தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் விமர்சனம்..!
தேர்தல் நேரத்தில் மட்டும் ராகுல் காந்தி வருவதால் அவரை தேர்தல் காந்தி என்றே அழைப்பேன் என தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா தெரிவித்துள்ளார்.
மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தெலுங்கானா மாநிலத்துக்கு நவம்பர் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, தெலுங்கானாவில் ஆட்சியைக் கைப்பற்ற ஆளும் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், தேர்தலுக்காக மட்டுமே வருபவர் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி என தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கவிதா கூறுகையில், தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் நடக்கும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தியும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் இன்று தெலுங்கானா வருகிறார்கள். அவர்கள் உத்தரவாதம் அளித்து பொய்யான வாக்குறுதிகளை அளிக்கின்றனர்.
காங்கிரஸ் கட்சி சொல்வதை அவர்கள் செய்யவே மாட்டார்கள். தேர்தல் நேரத்தில் மட்டும் ராகுல் காந்தி வருவதால் அவரை தேர்தல் காந்தி என்றே அழைப்பேன் என தெரிவித்துள்ளார்.
Leave your comments here...