நக்சல் இயக்கத்தினருடன் தொடர்பு – ஆந்திரா, தெலுங்கானாவில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை..!

இந்தியா

நக்சல் இயக்கத்தினருடன் தொடர்பு – ஆந்திரா, தெலுங்கானாவில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை..!

நக்சல் இயக்கத்தினருடன் தொடர்பு – ஆந்திரா, தெலுங்கானாவில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை..!

நக்சல் வழக்குகள் தொடர்பாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் 60க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிரடியாக இன்று சோதனைகளை நடத்தி வருகிறது.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் நக்சல்களின் ஆதிக்கம் அதிகரித்ததை தொடர்ந்து, அதனை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனிடையே ஆந்திரா, தெலங்கானா என இரு மாநிலங்களாக பிரிக்கப்பட்ட பிறகும் பல்வேறு மாவட்டங்களில் நக்சல்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனை கட்டுப்படுத்தும் வகையில் அவ்வப்போது தேசிய புலனாய்வு முகமை மற்றும் மாநில போலீசார் தொடர் ஆய்வுகள் மற்றும் சோதனைகளை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நக்சல்கள் வழக்கு தொடர்பாக ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் சுமார் 60க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தெலங்கானாவின் ஹைதராபாத் மற்றும் ஆந்திராவின் குண்டூர், நெல்லூர் மற்றும் திருப்பதி மாவட்டங்களில் இந்த ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் நக்சல் இயக்கத்தினருடன் தொடர்பில் இருப்பவர்கள் மற்றும் நக்சல் ஆதரவாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம், தடை செய்யப்பட்டுள்ள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த பல்வேறு இடங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில், வெடிப்பொருட்கள், ட்ரோன்கள் மற்றும் லேத் மெஷின்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பாக கடந்த செப்டம்பர் 9ம் தேதி தேசிய புலனாய்வு முகமை தெலங்கானா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் ஆய்வு நடத்தியிருந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள தேசிய புலனாய்வு முகமை, 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...