ரூ.2000 நோட்டு மாற்ற இன்றே கடைசி – காலக்கெடு நீட்டிக்கப்படாது என ஆர்பிஐ திட்டவட்டம்!!
வங்கிகளில் ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைவதாக ரிசர்வ் வங்கி தெளிவுப்படுத்தி உள்ளது. பொதுமக்களுக்கு ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கு 4 மாதங்கள் வரை அவகாசம் கொடுக்கப்பட்டு விட்டதால், செப்டம்பர் 30ம் தேதிக்கு பின், அந்த நோட்டு செல்லாதது ஆகிவிடும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மிலாடி நபி, வார விடுமுறை, காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை காரணமாக நோட்டுகளை மாற்றுவதற்கு கால நீட்டிப்பு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிசர்வ் வங்கி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
செப்டம்பர் 30ம் தேதிக்கு பின் ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்றும் அந்த நோட்டுகளை வைத்து இருப்பவர்கள் வங்கியில் ஒப்படைக்க மாறும் கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டது.
இதையடுத்து வங்கிகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் ரூ.2000 நோட்டுகளை பொதுமக்கள் மாற்றி வந்தனர். செப்டம்பர் 28ம் தேதிக்கு பிறகு ரூ.2000 நோட்டுகளை வாங்க வேண்டாம் என்று அரசு போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் நேற்றுடன் ரூ.2000 வாங்கப்படாது என தெரிவிக்கப்பட்டது. நோட்டுகளை திரும்பப்பெறுவதாக அறிவித்த பின், புழக்கத்தில் இருந்த 93% ரூ.2000 நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டு விட்டதாக இந்த மாத தொடக்கத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்து இருந்தது.
Leave your comments here...