நாகப்பட்டினம் – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து… அக்டோபர் மாதம் தொடங்கும் – அமைச்சர் தகவல்
நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து, 60 கடல் மைல்கள் தொலைவில், இலங்கையிலுள்ள காங்கேசந்துறைமுகத்திற்கு 150 பயணிகள் பயணிக்கும் விரைவு பயணியர் கப்பல் (High Speed Passenger Ferry) இயக்குவதற்கான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். துறைமுகத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு அக்டோபர் மாதம் முதல் வாரத்தில், தமிழ்நாடு அரசுடன் இணைந்து கப்பல் போக்குவரத்தினைத் தொடங்க மத்திய அரசு உத்தேசித்துள்ளது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு. நாகப்பட்டினம் துறைமுக கால்வாய் தூர்வாருதல், பயணியர் முனையம் அமைப்பது போன்ற பணிகளும் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் (Shipping Corporation of India), விரைவு பயணியர் கப்பல் போக்குவரத்தை நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இயக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
பயணியர் கப்பல் பயணம், வெளிநாட்டு பயணம் என்பதால் ஒன்றிய அரசின் தொழிற்துறை பாதுகாப்பு அதிகாரிகள் (CISF) மூலம் கையாள மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது நாகப்பட்டினம். துறைமுகத்தில் நடைபெற்று வரும் பணிகள் வரும் 2 ம் தேதிக்குள் நிறைவு பெற்று வரும் அக்டோபர் மாதம் மத்திய அரசு அனுமதியுடன் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து தொடங்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.
Leave your comments here...