தமிழகம் முழுவதும் 31 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை – சிக்கிய ஆவணங்கள் என்ன..!

இந்தியாதமிழகம்

தமிழகம் முழுவதும் 31 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை – சிக்கிய ஆவணங்கள் என்ன..!

தமிழகம் முழுவதும் 31 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை – சிக்கிய ஆவணங்கள் என்ன..!

தமிழ்நாடு, தெலங்கானாவில் 31 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தியதில் பல முக்கிய ஆவணங்கள், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோயம்புத்தூர் உக்கடம் பகுதியில் கடந்தாண்டு கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தமிழகம் மற்றும் தெலங்கானாவில் இன்று அதிகாலை தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

தீவிரவாத அமைப்பு குறித்த சந்தேகத்தின் பேரில், கோவையில் 22 இடங்களிலும், சென்னையில் 3 இடங்கள், தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் ஒரு இடத்திலும், தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாத், சைபராபாத் ஆகிய 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 31 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில், டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள், இந்திய மற்றும் வெளிநாட்டு பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், தமிழகம் மற்றும் தெலங்கானாவில் நடத்தப்பட்ட சோதனையின் போது கைப்பற்றப்பட்ட மொபைல் போன்கள், லேப்டாப்கள் மற்றும் ஹார்டு டிஸ்க்குகளில் உள்ள தரவுகளை ஆய்வு செய்யும் பணியில், தீவிரவாத தடுப்பு அமைப்பு ஈடுபட்டுள்ளது.

இந்தச் சோதனையின் போது, ​​ரூ.60 லட்சம் இந்திய பணம் மற்றும் 18,200 அமெரிக்க டாலர்கள் மற்றும் உள்ளூர், அரபு மொழிகளில் உள்ள புத்தகங்கள் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரபு மொழி பயிற்சி வகுப்புகள் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ்., உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு ஆள்கள் சேர்க்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. அரபு மொழி வகுப்புகளை நடத்தும் போர்வையில் வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமூகவலைதளங்களில் மூலம் வேகமாக பரவியுள்ளது. இதில் ஈர்க்கப்பட்டவர்களை பயன்படுத்தி கோவை கார் குண்டு வெடிப்பு சதித்திட்டத்தைத் தீட்டியுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...