டெல்லி மதுபான கொள்கை ஊழல் – லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை உதவி இயக்குநர் மீது சிபிஐ வழக்கு..!
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் உதவி கோரிய மதுபான தொழிலதிபர் அமந்தீப் தாலிடம் இருந்து ரூ.5 கோடி பணம் வாங்கியதாக அமலாக்கத்துறை உதவி இயக்குனர் பவன் காத்ரி மீது சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு விஸ்வருபம் எடுத்துள்ளது. அங்கு துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.மறுபக்கம் அம்மாநில முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராகவும் நடவடிக்கை ஆயத்தமாகி வருகிறது அமலாக்கத்துறை. இதுதவிர தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவையும் அழைத்து விசாரித்தது அமலாக்கத்துறை. இந்த விவகாரத்தில் பல முக்கிய விஜபிக்கள் சிக்கலில் சிக்கும் வாய்ப்பு உள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் உதவி செய்யுமாறு மதுபான தொழிலதிபர் அமந்தீப் தால் ரூ.5 கோடி பணத்தை அமலாக்கத்துறை உதவி இயக்குனர் பவன் காத்ரிக்கு கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை உதவி இயக்குனர் பவன் காத்ரி சிபிஐ மீது வழக்கு பதிவு செய்துள்ளது,
இது தவிர ஏர் இந்தியாவின் உதவி பொது மேலாளர் தீபக் சங்வான், கிளாரிட்ஜஸ் ஹோட்டல் மற்றும் ரிசார்ட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி விக்ரமாதித்யா, ஆடிட்டர் பிரவீன் குமார் வாட்ஸ் மற்றும் நிதேஷ் கோஹர் மற்றும் பிரேந்தர் பால் சிங் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்லி அரசின் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமந்தீப் தால் மற்றும் அவரது தந்தை பிரேந்தர் பால் சிங் ஆகியோர் 5 கோடி ரூபாய் அமலாக்கத்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுபற்றி அமலாக்க இயக்குனரகம் சிபிஐக்கு அளித்த புகாரின் பேரில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
அமலாக்கத்துறை விசாரணையில் இருந்து காப்பாற்றிக் கொள்ள ஆடிட்டர் பிரவீன் வாட்ஸ் ஏற்பாட்டில் இந்த விவகாரம் நடந்ததாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். 2022 டிசம்பரில் ஏர் இந்தியாவின் உதவி பொது மேலாளர் தீபக் சங்வான் தான், அமலாக்கத்துறை உதவி இயக்குனர் பவன் காத்ரியை தனக்கு அறிமுகம் செய்து வைத்ததாக ஆடிட்டர் பிரவீன் வாட்ஸ் அமலாக்கத்துறையிடம் தெரிவித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் பட்டியலிலிருந்து மதுபான தொழில் அதிபர் அமந்தீப் தாலின் பெயரை நீக்குவதற்காக, டெல்லி ஐடிசி ஹோட்டலுக்குப் பின்னால் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் 2022ம் ஆண்டு டிசம்பரில் சங்வான் மற்றும் அமலாக்கத்துறை உதவி இயக்குனர் காத்ரிக்கு முன்பணமாக ரூ.50 லட்சம் கொடுத்தோம் என ஆடிட்டர் பிரவீன் வாட்ஸ் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை தனது விசாரணையை சிபிஐக்கு அனுப்பியதை அடுத்து, சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
Leave your comments here...