விண்வெளிக்கும், நிலவுக்கும் மனிதனை அனுப்புவதே இந்தியாவின் அடுத்த இலக்கு – பிரதமர் மோடி
நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் இன்று வெற்றிகரமாக தரையிறங்கி வரலாறு சாதனை படைத்துள்ளது. லேண்டர் தரையிறங்கியதை தென்ஆப்பிரிக்காவில் இருந்து காணொலி வழியே பிரதமர் மோடி கண்டு ரசித்தார். அப்போது தேசிய கொடியை அசைத்து பிரதமர் மோடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
பூமியின் துணைக்கோளான நிலவு (சந்திரன்) பற்றிய ஆராய்ச்சியில், ரஷியா, அமெரிக்கா, சீனா, ஜப்பானுக்கு அடுத்தபடியாக, முன்னணியில் உள்ள இந்தியா இதுவரை, சந்திரயான்-1, சந்திரயான்-2 ஆகிய இரண்டு விண்கலங்களை நிலவுக்கு அனுப்பி, அங்கு தண்ணீர் உள்ளது என உறுதி செய்துள்ளது.
தற்போது, நிலவின் தென் துருவத்தில், இதுவரை யாரும் ஆய்வு செய்யாத இடத்தில், தடம் பதிக்க இந்தியா முயற்சி மேற்கொண்டு, கடந்த மாதம் (ஜூலை) 14-ந்தேதி சந்திரயான்-3 விண்கலம் அனுப்பப்பட்டது.
நிலவு வட்டப்பாதையில் சுற்றி கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள உந்து கலனில் இருந்து லேண்டர் கருவி வெளியே கொண்டுவரப்பட்டு, அதே வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டே நிலவை நெருங்கி சென்றது. நிலவை தொட்டுவிடும் தூரத்தில் லேண்டர் கருவி சுற்றி வந்தது.
சரியாக, இன்று மாலை 6 மணி 4 நிமிடத்துக்கு நிலவில் தரை இறக்கப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகளால் முன்பே தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நிலவில் சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டரை தரையிறங்கும் நிகழ்வை இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து நேரலையாக ஒளிபரப்பும் நிகழ்ச்சி மாலை 5.22 மணியில் இருந்து தொடங்கியது. விண்வெளியில் சாதனை படைக்கும் இந்தியாவின் முயற்சியின் முக்கிய பகுதியாக, நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கும் நிகழ்வு அமைந்துள்ளது.
இதன்பின்னர், மாலை 5.46 மணியளவில் விக்ரம் லேண்டரை நிலவின் தரை பகுதியில் இறக்கும் கட்டம் தொடங்கியது. முதற்கட்டமாக விக்ரம் லேண்டருக்கும் நிலவுக்குமான தூரம் குறைக்கப்பட்டது. அதன்பின்னர் தானாக தரையிறங்கும் திட்ட நிகழ்வு (ஏ.எல்.எஸ்) தொடங்கப்பட்டது. அதன்படி நிலவில் எந்த பகுதியில் தரையிறங்குவது என்ற பகுதியை லேண்டர் தேர்வு செய்து, அந்த இடத்தில் மெதுவாக தரையிறங்கியது. இதன்மூலம் விண்வெளி துறையில் இந்தியா வல்லரசாகி உள்ளது. அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனாவை தொடர்ந்து இந்த சாதனையை படைத்த 4-வது நாடாக இந்தியா உருவாகி உள்ளது. எனினும், நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்கிய உலகின் ஒரே நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
அதன்பின்னர் இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:- இந்தியா புதிய வரலாறு படைத்திருக்கிறது. சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றி ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. நிலவின் தென் துருவத்தை அடைந்ததன் மூலம் யாரும் அடையாத சாதனையை இந்தியா அடைந்திருக்கிறது. வெற்றிக்கு உழைத்த அனைத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு கோடானுகோடி நன்றி. இது 140 கோடி இந்தியர்களின் இதயங்களின் மனவலிமைக்கான தருணம்.
Historic day for India's space sector. Congratulations to @isro for the remarkable success of Chandrayaan-3 lunar mission. https://t.co/F1UrgJklfp
— Narendra Modi (@narendramodi) August 23, 2023
இந்தியா தற்போது நிலவில் உள்ளது; சந்திரயான் 3 வெற்றிக்காக நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள். நிலா… நிலா… ஓடிவா … பாடலை இஸ்ரோ விஞ்ஞானிகள் மெய்பித்துள்ளனர். மாபெரும் சாதனை படைத்திருக்கிறது இஸ்ரோ. நிலவுக்கு மனிதனை அனுப்புவது தான் அடுத்தக் கட்ட திட்டம்.” என்று கூறினார்.சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 விண்கலம் விரைவில் அனுப்பப்படும்” என்றார். பார்க்கலாம்.
Leave your comments here...