ஜி20 நாடுகளின் சுகாதார கூட்டம்.. ஆயுஷ்மான் பாரத் திட்டம் – இந்தியாவை பாராட்டிய உலக சுகாதார அமைப்பு..!

இந்தியா

ஜி20 நாடுகளின் சுகாதார கூட்டம்.. ஆயுஷ்மான் பாரத் திட்டம் – இந்தியாவை பாராட்டிய உலக சுகாதார அமைப்பு..!

ஜி20 நாடுகளின் சுகாதார  கூட்டம்.. ஆயுஷ்மான் பாரத் திட்டம் –  இந்தியாவை பாராட்டிய உலக சுகாதார அமைப்பு..!

இந்தியா தலைமையில் ஜி20 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கி இன்று வரை குஜராத்தின் காந்திநகரில் நடைபெறுகிறது.

இம்மாநாட்டில் சுகாதார அவசரநிலை தடுப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் சுகாதார கட்டமைப்பில் கவனம் செலுத்துதல்; பாதுகாப்பான, பயனுள்ள, தரமான மற்றும் மலிவு மருத்துவ எதிர்விளைவுகள் (தடுப்பூசிகள், சிகிச்சைகள் மற்றும் நோய் கண்டறிதல்) அணுகல், மருந்துத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், டிஜிட்டல் ஹெல்த் கண்டுபிடிப்புகள், உலகளாவிய சுகாதார கவரேஜ் மற்றும் சுகாதார சேவை வழங்கல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த தொடக்க விழாவில் கலந்து கொண்டு உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டாக்டர் டெட்ரோஸ் பேசுகையில், ‘சுகாதார பாதுகாப்பு மற்றும் திட்டங்களை மேம்படுத்தி வருவதில் இந்தியாவை பாராட்டுகிறேன். ஜி-20 உச்சிமாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்துவதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உலகளாவிய ஹெல்த் கவரேஜ் மற்றும் உலகின் மிகப்பெரிய சுகாதார உத்தரவாத முயற்சியான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை முன்னேற்றுவதில் இந்தியாவின் நடவடிக்கைகளை பாராட்டுகிறேன்.

குஜராத்தின் ‘டெலிமெடிசின்’ சிறப்பாக செயல்படுகிறது’ என்று கூறினார். மேலும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசுகையில், ‘ஜி20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்’ என்றார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, காணொலி காட்சி மூலம் பங்கேற்று உரையாற்றினார்.

Leave your comments here...