சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் சட்ட நகல் எரிப்பு: இராணுவம் மற்றும் போலீசாருக்கு எதிராக செயல்பட்டவர்களை கைது செய்ய அர்ஜூன் சம்பத் கோரிக்கை..!
சென்னை ஐ.ஐ.டி. கல்வி வளாகத்தில் சட்ட நகலை எரித்தவர்களையும், இந்திய தேசம் மற்றும் இராணுவம் மற்றும் போலீசாருக்கு எதிராக செயல்பட்டவர்களையும் கைது செய்யக்கோரி பிரதமர் மோடி, சென்னை ஐஐடி கல்வி இயக்குனர், தமிழக முதல்வர், ஆகியோருக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் :- சென்னையிலுள்ள ஐ.ஐ.டி. (Chennai I.I.T) உயர்கல்வி வளாகத்தில் தொடர்ந்து பிரிவினைவாதிகள் மற்றும் தேச விரோதிகளின் கை ஓங்கி வருகிறது! ஏற்கனவே கிஸ் ஆஃப் லவ் ப்ரோக்ராம் (Kiss Of Love Programme) நடத்தியவர்கள், மோடி எதிர்ப்பு (Anti Modi Campaign), இந்திய எதிர்ப்பு (Anti India Campaign), இந்து சமய எதிர்ப்பு, போலீஸ் மற்றும் இந்திய இராணுவத்திற்கு எதிர்ப்பு என்று இன்னொரு JNU (Delhi Jawaharlal Nehru University)-ஆக சென்னை ஐஐடி கல்வி வளாகத்தை மாற்றி வருகிறார்கள், கல்விச்சூழலை கெடுத்து வருகிறார்கள். இதற்கு SFI, PFI, நக்சல், திராவிட இயக்கங்களும், தி.மு.க-வும் விடுதலை சிறுத்தைகளும் பின்னணியில் உள்ளனர்.
Vanakkam Chennai to the anti #CAAProtests
IIT Chennai & Loyola College Chennai join the countrywide mass movement.#CAAAgainstConstitution #CitizenshipAmendmentBill @godavar @sonaliranade @DesiPoliticks @Vidyut pic.twitter.com/Ezyt6cpwQ0— ପ୍ରିୟଦର୍ଶୀ/प्रियदर्शी/Priyadarshi/ਪ੍ਰਿਯਦਰਸ਼ੀ (@MajChowdhury) December 16, 2019
Tweet Pictures: IIT Chennai & Loyola College Chennai support of jamia university students
ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இஸ்லாமிய மாணவர்கள் போராட்டத்திற்கான, கோரிக்கைகளான வங்க தேசத்திலிருந்து சட்ட விரோதமாக ஊடுருவி வருகின்ற முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் வங்கதேச முஸ்லிம்களுக்கு ஆதரவு தெரிவித்தும் போராட்டம் நடத்திய, வன்முறையில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மீது ஜாமியா பல்கலைக்கழகத்தில் காவல்துறை நடத்திய தடியடியை கண்டித்து இன்று (16.12.2019) காலையில் சென்னை ஐஐடி யில் ஒருசில மாணவர்கள் தேசவிரோத கோசங்களை எழுப்பி வருகிறார்கள். இதனை அனைத்து ஊடகங்களும் நேரலையில் ஒலிபரப்பி வருகின்றன.
12 police personnel injured in the stone pelting by Jamia students. 2 cops in ICU. pic.twitter.com/OzKoknfwJ7
— Raj Shekhar Jha (@rajshekharTOI) December 13, 2019
மேலும் நாடாளுமன்றம் மற்றும் ராஜ்யசபை உள்ளிட்ட இரு அவைகளிலும் வைக்கப்பட்டு மெஜாரிட்டி உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டுள்ள இந்தியக் குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலையும் பெற்று இருக்கின்றது. இந்தியக் குடியுரிமைச் சட்டம் நாடு முழுக்க அமலுக்கு வந்துவிட்டது. ஆனாலும் இந்திய குடியுரிமை சட்டத்தின் நகலை எரித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆஸாதி! ஆஸாதி! (விடுதலை! விடுதலை!) என்று கத்துகிறார்கள். யாரிடமிருந்து இவர்களுக்கு விடுதலை வேண்டும். இந்தியாவில் இருக்கப்பிடிக்க இல்லை என்று சொன்னால் இவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டியது தானே. சட்டநகலை எரிப்பது, சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால் இதுவரை ஐ.ஐ.டி. கல்வி நிறுவன நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அம்பேத்கர், ஈவேரா வாசகர் வட்டம் எனும் பெயரில் ஏற்கனவே சைவ உணவு உண்ணுகின்ற மாணவனின் வாயில் இறைச்சியை திணித்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் மற்றும் ஒரு சில இடது சாரி சிந்தனையுள்ள மாணவர்கள் தொடர்ந்து ஐ.ஐ.டி. வளாகத்தில் கல்வி சூழ்நிலையை கெடுத்து வருகிறார்கள். இந்தியாவிற்கு எதிராக! இராணுவத்திற்கு எதிராக! போலீசுக்கு எதிராக! கோஷமிட்டு வரும் இவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இவர்கள் மீது தேச விரோத சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும்.
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இருக்கக்கூடிய இந்த 100 மாணவர்களையும் காவல்துறை வேடிக்கை பார்க்கக்கூடாது, ஐஐடி நிர்வாகம் வேடிக்கை பார்க்கக்கூடாது. தேசிய புலன் விசாரனை (NIA) போலீசார் இது குறித்து விசாரனை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் சார்பில் சென்னை ஐஐடி இயக்குனர் இடத்தில் கோரிக்கை மற்றும் புகார் மனுவை சமர்ப்பிக்க உள்ளோம்.
மேலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். உலகப் புகழ்பெற்ற சென்னை ஐஐடி வளாகத்தில் நக்சலைட்டுகள், ஜிகாதி சக்திகளும் ஊடுருவியுள்ளது வேதனை அளிக்கின்றது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் இது விஷயத்தில் நேரடி கவனம் கொடுத்து சென்னை ஐஐடி வளாகத்தில் ஊடுருவியுள்ள தேசவிரோத சக்திகளை அப்புறப்படுத்தி கல்வி சூழ்நிலையை பாதுகாக்கும்படி இந்து மக்கள் கட்சியின் சார்பில் அந்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.
Leave your comments here...