இந்தியாவிலேயே முதன்முறையாக.. பெண் சிறைவாசிகள் நடத்தும் பெட்ரோல் பங்க் – அமைச்சர் திறந்துவைப்பு..!

தமிழகம்

இந்தியாவிலேயே முதன்முறையாக.. பெண் சிறைவாசிகள் நடத்தும் பெட்ரோல் பங்க் – அமைச்சர் திறந்துவைப்பு..!

இந்தியாவிலேயே முதன்முறையாக.. பெண் சிறைவாசிகள் நடத்தும் பெட்ரோல் பங்க் – அமைச்சர் திறந்துவைப்பு..!

இந்தியாவிலேயே முதல் முறையாக புழல் மத்திய சிறை அருகே பெண் கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் விற்பனை நிலையம் திறக்கப்பட்டுள்ளது. சிறைத்துறை அமைச்சர் ரகுபதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் இணைந்து ஏற்கனவே தமிழ்நாட்டில் 5 இடங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் நிறுவப்பட்டு சிறைவாசிகளை கொண்டு இயங்கி வருகின்றன.

சென்னை புழல் பெண்கள் மத்திய சிறையின் அருகே பெண் கைதிகள் பணியாற்றுவதற்காக புழல் – அம்பத்தூர் சாலையில் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மையம் அமைக்கப்பட்டது. நன்னடத்தை அடிப்படையிலான சிறைவாசிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் இந்த சிறை பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பணியாற்றிட வாய்ப்பு வழங்கப்படுகிறது. பகல் நேரத்தில் இரண்டு ஷிப்டுகளில் 30 பெண் சிறைவாசிகளும், இரவுப்பணியில் 17ஆண் சிறைவாசிகளும் பணியாற்றிடும் வகையில் இந்த பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை தமிழ்நாடு சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் முதல் விற்பனையையும் அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, “இந்தியாவிலேயே முதல் முறையாக பெண் சிறைவாசிகளால் நடத்தப்படும் முதல் பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் விடுதலையான பெண் சிறைவாசிகளுக்காக பெட்ரோல் பங்க் நடத்தப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் பெண் சிறைவாசிகளாலே நடத்தப்படும் முதல் பெட்ரோல் பங்க் என்ற பெருமையை கொண்டது.

மகளிர் முன்னேற்றத்திற்கும், ஆணுக்கு பெண் சமம் என்ற திராவிட மாடல் ஆட்சிக்கு எடுத்துக்காட்டு. பெண் சிறைவாசிகள் மாதந்தோறும் சுமார் 6000 ரூபாய் தங்களுடைய குடும்பத்திற்கு அனுப்பும் வகையில் தற்போது பணி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் மாதந்தோறும் 10000 ரூபாய் அனுப்பும் நிலை உருவாக்கி தரப்பட உள்ளது. சிறையில் இருந்தாலும் தங்களை உணர்ந்து, திருந்தி வாழும் வாய்ப்பை பெற்று தங்களது குடும்பத்திற்கு ஆகும் செலவினை சிறையில் இருந்து அனுப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைகளில் உள்ள ஆண், பெண் சிறைவாசிகள் ஏதேனும் ஒரு தொழிலில் ஈடுபடுத்தி மாதந்தோறும் தங்களது குடும்பத்திற்கு பணம் அனுப்பும் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.

Leave your comments here...