பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் – மக்களவையில் அமித்ஷா பதில்!
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
மத்திய அரசின் மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக, மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளித்து உரையாற்றினார். அரசியல் நோக்கத்தோடு எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம்,அக்கட்சிகளின் உண்மை முகத்தை வெளிப்படுத்தி இருப்பதாக தெரிவித்தார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தை நேர்மையுடன் எதிர்கொள்வோம் என உறுதிப்பட தெரிவித்த அமித்ஷா, மக்களும், நாடாளுமன்றமும் பிரதமர் நரேந்திரமோடி மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும் கூறினார். 2014-ம் ஆண்டுக்கு பிறகு ஊழலையும், வாரிசு அரசியலையும் பிரதமர் மோடி முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக கூறிய அமித்ஷா, தேசிய ஜனநாயக கூட்டணியில் 4 ஆயிரம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக தினமும் 17 மணி நேரம் உழைத்து வருவதாகவும், காங்கிரஸ் கட்சியை போன்று ஊழல் செய்யாமல், ஏழைகளுக்கான நிதி பாஜக ஆட்சியில் முழுமையாக சென்றடைகிறது எனவும் கூறினார்.
Leave your comments here...