திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை – 7 மாதங்களில் ரூ. 827 கோடி!

ஆன்மிகம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை – 7 மாதங்களில் ரூ. 827 கோடி!

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை – 7 மாதங்களில் ரூ. 827 கோடி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏழு மாதங்களில் பக்தர்கள் ரூ. 827 கோடி உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் காணிக்கை தொடர்பான விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
அதன்படி ஜனவரி மாதம் 123 கோடி ரூபாயும், பிப்ரவரி மாதம் 114 கோடி ரூபாயும் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.

மார்ச் மாதம் 120 கோடி ரூபாயும், ஏப்ரல் மாதம் 114 கோடி ரூபாயும், மே மாதம் 109 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது. ஜூன் மாதம் 116 கோடி ரூபாயும், ஜூலை மாதம் 120 கோடி ரூபாயும் காணிக்கையாக கிடைத்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் தேதி மட்டும் ஒரே நாளில் 7 கோடி 68 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைத்தது. இந்தத் தொகை தேவஸ்தான வரலாற்றில் ஒரே நாளில் ஏழுமலையானுக்கு கிடைத்த மிகப்பெரிய காணிக்கை தொகை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூலை மாதம் சுமார் 23 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டுள்ளனர்.

Leave your comments here...