தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் 1600 கோடி முதலீடு : 6000 பேருக்கு வேலை கிடைக்கும் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

தமிழகம்

தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் 1600 கோடி முதலீடு : 6000 பேருக்கு வேலை கிடைக்கும் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் 1600 கோடி முதலீடு : 6000 பேருக்கு வேலை கிடைக்கும் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் மூலம் 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் ரூ.1,600 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலையை ஃபாக்ஸ்கான் நிறுவனம் தொடங்க உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஃபாக்ஸ்கான் நிறுவன தலைவர் யங் லியு முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.


இது தொடர்பாக பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இந்த ஒப்பந்தம் மூலம் 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.ஃபாக்ஸ்கான் குழும தலைவருடன் மின்சார வாகனம் மற்றும் எலக்ட்ரானிக் பாகங்களில் மேலும் முதலீடு செய்வது குறித்தும் விவாதித்ததாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக தமிழ்நாட்டை மாற்றும் லட்சியத்தில், இது மற்றொரு மைல்கல் என்று முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஃபாக்ஸ்கானின் துணை நிறுவனமான ஃபாக்ஸ்கான் இண்டஸ்ரியல் இண்டெர்நெட் நிறுவனம் புதிய ஆலையை அமைக்கிறது. புதிய ஆலையை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் தமிழக அரசும், ஃபாக்ஸ்கான் நிறுவனமும் கையெழுத்திட்டன. ஃபாக்ஸ்கானின் புதிய ஆலை மூலம் மொபைல் போன் உதிரி பாகங்கள் தயார் செய்யப்பட உள்ளன. இந்த புதிய நிறுவனம் மூலம் 6,000 பேருக்கு புதிதாக வேலை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஆலை 2024ம் ஆண்டுக்குள் தயாராகும் என கூறப்படுகிறது. அதைதொடர்ந்து அங்கு கூடுதல் முதலீடு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய ஆலை காஞ்சிபுரத்தில் அமைய உள்ளதாக ஃபாக்ஸ்கான் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே சென்னையில் ஆப்பிள் நிறுவனத்திற்கான ஐபோன் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் 35,000 பேர் வேலை பார்க்கின்றனர். அதேநேரம் புதிய ஆலையில் எந்த நிறுவனத்தின் செல்போன்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெறும் என்பது தொடர்பான தகவல் எதுவும் வெளியாகவில்லை. புதிய இந்திய ஆலை ஐபோன்களுக்கான உதிரிபாகங்களை உருவாக்குமா அல்லது மற்ற நிறுவனங்களுக்காக அல்லது இரண்டும் தயாரிக்குமா என்பது விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் செமிகண்டக்டர் துறையில் நுழைவதை நோக்கமாகக் கொண்ட ஃபாக்ஸ்கான் நிறுவனம், குஜராத் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கர்நாடகாவில் புதிய ஆலைக்காக 8 ஆயிரத்து 200 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான பேச்சுவார்த்தையை, ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் அம்மாநில அரசு முன்னெடுத்துள்ளது.இது தொடர்பாக பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இந்த ஒப்பந்தம் மூலம் 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஃபாக்ஸ்கான் தலைவர் யங் லியு குஜராத்தில் நடைபெற்ற வருடாந்திர செமிகண்டக்டர் நிகழ்வில் பங்கேற்று பேசினார். அப்போது “இந்தியாவில் சிப் உற்பத்திக்கான செயல்பாடு நன்றாக உள்ளது. இதில் நல்ல நிபுணத்துவம் கொண்ட பலர் பணியாற்ற வேண்டும். இந்த துறையில் முன்னேற்றம் காண இந்தியா சிறப்பான இடத்தை நோக்கி பயணித்து வருகிறது. குறிப்பிட்ட துறையில் முன்னேற வேண்டும் என்ற நம்பிக்கை எங்கு பிறக்கிறதோ அங்கிருந்து தான் நல்ல வழி கிடைக்கும். தற்போதைய சூழலில் சிப் துறை மிகவும் முக்கியமாகும். இந்தியா இப்போது தான் கால்வைக்கிறது. இதனால் இந்தியாவுக்கு நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம். இந்தியாவின் சிப் தயாரிக்கும் முயற்சியை மற்றவர்கள் ஆதரிக்கின்றனர். உண்மையில் தைவான் இந்தியாவின் நம்பிக்கை அளிக்கும் வகையில் நம்பகமான நாடாக செயல்படும்” என பேசினார்.

இதற்கிடையில், ஃபாக்ஸ்கான் வேதாந்தாவுடன் 19.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான, மின்னணு சிப்ஸ் தயாரிக்கும் கூட்டு முயற்சியில் இருந்து அண்மையில் வெளியேறியது. மேலும் “திட்டம் போதுமான அளவு வேகமாக முன்னேறாததே இதற்கு காரணம்” என்று விளக்கமளித்துள்ளது. இருப்பினும் இந்தியாவுக்கு உறுதியளிக்கிறோம் என்று ஃபாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave your comments here...