கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் உட்பட தமிழ்நாட்டில் 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு..!!
தமிழ்நாட்டில் மேலும் 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. ஒரு குறிப்பிட்ட இடத்தை சேர்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு மத்திய அரசால் புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. புவிசார் பெற்ற பொருட்களை வியாபார நோக்கத்தோடும், போலியாக வேறு பெயர்களில் பயன்படுத்துவதையும் தடுக்க முடியும்.
அந்த வகையில் தமிழகத்தில் திண்டுக்கல் பூட்டு, சேலம் சுங்குடி சேலை, காஞ்சி பட்டு, மதுரை மல்லிகை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், பழநி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டு உள்ளிட்ட உணவு, வேளாண் மற்றும் பாரம்பரிய உற்பத்தி பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் மேலும் 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தகவல் தெரிவித்துள்ளார். வீரவாநல்லூர் செடி புட்டா சேலை, ஜடேரி நாமக்கட்டி, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழத்துக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு இதுவரை 17 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தம் 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...