காவிரியில் கழிவு நீரை கலந்த 33 ஆலைகள் மூடல் – மத்திய அரசு தகவல்..!

இந்தியாதமிழகம்

காவிரியில் கழிவு நீரை கலந்த 33 ஆலைகள் மூடல் – மத்திய அரசு தகவல்..!

காவிரியில் கழிவு நீரை கலந்த 33 ஆலைகள் மூடல் – மத்திய அரசு தகவல்..!

விதிகளை பின்பற்றாமல் காவிரியில் கழிவு நீரை திறந்துவிட்ட 33 ஆலைகள் மூடப்பட்டுள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கொ.ம.தே.க. எம்.பி. சின்ராஜ் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் பதிலளித்து பேசினார்.

அப்போது; விதிகளை பின்பற்றாமல் காவிரியில் கழிவு நீரை திறந்துவிட்ட 33 ஆலைகள் மூடப்பட்டுள்ளது. ; 2022 ஜூனில் இருந்து ஆகஸ்ட் வரை காவிரி ஆற்றை மாசுப்படுத்திய 44 சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2010-ல் இருந்து இதுவரை 406 நிறுவனங்களிடம் இருந்து ரூ.10,000 முதல் ரூ.20 லட்சம் வரை வசூலிக்கப்பட்டுள்ளது. காவிரியில் கழிவு நீரை கலந்த சாயப் பட்டறைகள், துணி நூல் ஆலைகள் உள்பட 406 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டில் இருந்து இதுவரை கழிவு நீரை கலந்த 406 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவிரியில் கர்நாடகத்தின் 33 இடங்களிலும் தமிழ்நாட்டிள் 26 இடங்களிலும் நீரின் தன்மை குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

காவிரி கரையில் ரசாயன ஆலைகள், சாயப்பட்டறைகள், தோல் பதனிடும் ஆலைகள், காகித ஆலைகள், சர்க்கரை ஆலைகள் அமைந்துள்ளன. கரையில் அமைந்துள்ள ஆலைகளால் காவிரி நீர் மாசுபடுவதை தடுக்க மத்திய, மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்கள் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 2 மாநிலங்களின் மாசு கட்டுப்பாடு வாரியங்களும் இணைந்து கண்காணித்து வருவதாக மத்திய அமைச்சர் கூறினார்.

Leave your comments here...