அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: பிரதமர் மோடி உட்பட 10,000 பேருக்கு அழைப்பு..!
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் அடுத்தாண்டு ஜனவரி 14ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி உட்பட 10 ஆயிரம் பேருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளதாக ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020 ஆக.,5ல் அடிக்கல் நாட்டி துவக்கினார். 2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில், மூன்று தளங்களாக அமைக்கப்படுகிறது. கோயிலை சுற்றி 70 ஏக்கரில் ஸ்ரீராமகுண்டம், அனுமன் சிலை, ராமாயண நூலகம், மகரிஷி, வால்மிகி ஆராய்ச்சி நிலையம் மூலவர் மண்டபம் உட்பட 6 மண்டபங்கள் அமைய உள்ளன. மூலவர் கோபுரத்தின் உயரம் 161 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 2024 ஜன., 14ல், ராமர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட பின் கோவில் முறைப்படி பக்தர்களுக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி உட்பட 10 ஆயிரம் பிரமுகர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளது என ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். 2024 ஜனவரி 15 முதல் 24 வரை நடைபெற உள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பர். இதனால், அங்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயில் கட்டுமானத்தை ஜனவரிக்குள் முடிப்பதற்காக இரவு பகலாக கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.
Leave your comments here...